வருகிறது அதிபயங்கர வேகத்தில் செல்லக்கூடிய புதிய பென்ட்லீ கார்: விபரங்கள்

By Saravana

கடந்த ஆண்டு கான்டினென்டல் ஜிடி3 என்ற புதிய ரேஸ் காரை பென்ட்லீ நிறுவனம் அறிமுகம் செய்தது. இதே காரின் சாதாரண சாலைகளில் செல்லும் அம்சங்கள் கொண்ட காரையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தது.

இதுவரை வந்த பென்ட்லீ கார்களிலேயே அதிவேகத்தில் செல்லக்கூடிய கார் என்பதால் கோடீஸ்வர வாடிக்கையாளர்களும், ஆட்டோமொபைல் பிரியர்களும் இந்த கார் குறித்து ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த காத்திருப்புக்கு முடிவு கிடைக்கும் வகையில் அந்த கார் குறித்த அறிவிப்பை பென்ட்லீ வெளியிட்டுள்ளது.


புதிய மாடல்

புதிய மாடல்

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி3- ஆர் என்ற பெயரில் இந்த புதிய கார் வருகிறது.

மிக்ஸிங்

மிக்ஸிங்

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி3 ரேஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ், மற்றும் கான்டினென்டல் ஜிடி காரின் சொகுசு அம்சங்களையும் கலந்து இந்த புதிய கான்டினென்டல் ஜிடி3- ஆர் காரை வடிவமைத்துள்ளனர்.

ஹெவி வெயிட்

ஹெவி வெயிட்

இந்த கார் 2,194 கிலோ எடை கொண்டது. அதேவேளை, எடை குறைப்பு முயற்சியால் ஜிடி ஸ்பீடு காரைவிட 100 கிலோ எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 572 எச்பி பவரையும், வெறும் 1,700 ஆர்பிஎம்.,மில் 700 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் கொண்டது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி3- ஆர் காரில் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. ஜிடி3 ரேஸ் கார் ரியர் வீல் கொண்டிருக்கும் நிலையில், ஜிடி3 ஆர் கார் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் வருகிறது.

செயல்திறன்

செயல்திறன்

2 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 273 கிமீ வேகம் வரை செல்லும்.

 சிறப்பான தொழில்நுட்பம்

சிறப்பான தொழில்நுட்பம்

பென்ட்லீ கார்களிலேயே முதல்முறையாக ஜிடி3 ஆர் காரில் டார்க் வெக்டரிங் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சிறந்த கட்டமைப்பு கொண்ட சேஸீ போன்றவையும் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி3 ஆர் காரின் ஓட்டுதல் தரத்தை உயர்த்துவதோடு, சிறந்த பாதுகாப்பையும் வழங்கும்.

வெளிப்புற டிசைன்

வெளிப்புற டிசைன்

கார்பன் ஃபைபர் ஸ்பிளிட்டர்கள், ரியர் விங் மற்றும் இரண்டு பானட் வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 பிளாக் ஃபினிஷ்

பிளாக் ஃபினிஷ்

ஹெட்லைட், கிரில், கண்ணாடிகள், அலாய் வீல்கள் ஆகியவை விசேஷ கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

வண்ணம்

வண்ணம்

வெள்ளை நிறத்தில் பளபளக்கும் இந்த காரில் இரட்டை வண்ண கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மூலம் அழகு கூட்டப்பட்டுள்ளது.

 இன்டிரியர்

இன்டிரியர்

கார்பன் ஃபைபர், அல்கான்ட்ரா லெதர் பினிஷிங், ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் மூலம் உள் வடிவமைப்பு கவர்கிறது.

 இருக்கைகள்

இருக்கைகள்

இருவர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்டது. பெலூகா பிளாக் லெதர் என்ற விசேஷ லெதர் இருக்கைகளும், அதில் செய்யப்பட்டிருக்கும் பச்சை நிற எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளும் கவர்கிறது.

கதவுகள்

கதவுகள்

இருக்கைகள் போன்றே கதவுகளும் கருப்பு, பச்சை வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

 இடவசதி

இடவசதி

இருக்கைக்கு பின்னால் தெரியும் இந்த இடவசதி முழுவதும் கார்பன் ஃபைபரால் கட்டப்பட்டுள்ளது. அதேவேளை, உள் வடிவமைப்பை ஒரே மாதிரியாக காட்டும் விதத்தில் கருப்பு, பச்சை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

 லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் 300 கார்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த கார்கள் அனைத்தும் எந்திர துணை இல்லாமல் பணியாளர்களால் கட்டமைக்கப்பட உள்ளன.

 அறிமுகம்

அறிமுகம்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு ஆட்டோமொபைல் திருவிழாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Ever since Bentley announced the Continental GT3 race car last year, we had been waiting for a road going version of the same. That day has now arrived, with the announcement of the Bentley Continental GT3-R.
Story first published: Thursday, June 19, 2014, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X