லிட்டர் டீசலுக்கு 100 கிமீ செல்லும் ஃபோக்ஸ்வேகன் காரின் டெலிவிரி துவங்கியது!

100 கிமீ மைலேஜ் தரும் ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்1 ஹைபிரிட் காரின் டெலிவிரி துவங்கப்பட்டுள்ளது. பெர்லின் நகரை சேர்ந்த மெக்கின்ஸி என்ற நிறுவனத்தின் இயக்குனர் கிறிஸ்டியன் மலோர்னி என்பவர்தான் இந்த காரின் முதல் வாடிக்கையாளர். ஜெர்மனியில், டிரெஸ்டனில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல் எக்ஸ்எல்1 கார் கிறிஸ்டியன் மலோர்னியிடம் டெலிவிரி கொடுக்கப்பட்டது.

இவரை அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிடுவதற்கு காரணம், இந்த காருக்கான தேவை எகிடுதகிடாக அதிகரித்துள்ளது. எனவே, இந்த காரை பெறுவதற்கு பல வாடிக்கையாளர்கள் தவம் கிடக்கின்றனர். இந்த நிலையில்தான் மலோர்னி இந்த காரின் முதல் வாடிக்கையாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

"கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோதே என்னை இந்த கார் கவர்ந்ததால், முன்பதிவு செய்தேன். இப்போது இந்த காரை ஓட்டும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். இதன் டிசைன், நவீன வசதிகள் என அனைத்திலும் புதுமைகளை படைத்து ஃபோக்ஸ்வேகன் அசத்தியிருக்கிறது என்று கிறிஸ்டியன் மலோர்னி மகிழ்ச்சி தெரிவித்தார்.


முதல் வாடிக்கையாளர்

முதல் வாடிக்கையாளர்

ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்-1 காரின் முதல் வாடிக்கையாளரான கிறிஸ்டியன் மலோர்னி காரை டெலிவிரி பெறுவதை காணலாம். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் இந்த காரின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.

டிசைன்

டிசைன்

அலுமினியம் மற்றும் சிஆர்எஃப்பி எனப்படும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பாகங்களால் தொழிலாளர்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. எனவே, ஜெர்மனியின் ஓஸ்னாபுரூக் ஆலையில் மொத்தம் 200 எக்ஸ்எல்1 கார்களை மட்டுமே தயாரிக்க ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த காரை வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டு முன்பதிவு நடக்கிறதாம். எனவே, முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கார்களை தயாரித்து கொடுக்க இயலாத நிலையில் ஃபோக்ஸ்வேகன் உள்ளது.

 வாடிக்கையாளர் தேர்வு

வாடிக்கையாளர் தேர்வு

முன்பதிவை பார்த்து திகைப்பில் ஆழ்ந்துள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களை தேர்வு செய்து கார்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை துவங்க உள்ளது.

 டிசைன்

டிசைன்

அதிக மைலேஜ் தருவதற்காக தங்கு தடையின்றி செல்லும் விதத்தில் பிரத்யேக ஏரோடைனமிக் டிசைனை கொண்டிருக்கிறது. இலகு எடை கொண்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்த கார் வெறும் 795 கிலோ மட்டுமே எடை கொண்டது.

குறைந்த பவர் போதும்

குறைந்த பவர் போதும்

இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தில் சீராக செல்வதற்கு 8.4 பிஎஸ் பவர் போதுமானது. அந்த அளவுக்கு சிறப்பான காற்றியக்கவியல் தத்துவத்தில் வடிவமைத்துள்ளனர்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். 0-100 கிமீ வேகத்தை 12.7 வினாடிகளில் கடந்துவிடும்.

 டீசல் ஹைபிரிட் நுட்பம்

டீசல் ஹைபிரிட் நுட்பம்

ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இந்த மைலேஜை எக்ஸ்எல்1 தருகிறது. 48 பிஎஸ் பவரை அளிக்கும் 2 சிலிண்டர் டீசல் எஞ்சினும், 27 பிஎஸ் பவரை அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன.

மைலேஜ்

மைலேஜ்

ஹைபிரிட் நுட்பத்தின் அடிப்படையில், கணக்கீடுகளின்படி 0.9 லிட்டர் டீசலுக்கு 100 கிமீ மைலேஜை இந்த கார் சாத்திப்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் நண்பன்

சுற்றுச்சூழல் நண்பன்

இந்த கார் கிலோமீட்டருக்கு வெறும் 21 கிராம் மட்டுமே கார்பனை வெளியிடும் என்பதால் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக கருதலாம்.

வடிவம்

வடிவம்

3,888 மிமீ நீளம், 1,665 மிமீ அகலம் மற்றஉம் 1,153 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போலோவைவிட குறைவான உயரத்தை கொண்டிருக்கும்.

நீண்ட கால முயற்சி

நீண்ட கால முயற்சி

கடந்த 2002ம் ஆண்டு முதன்முறையாக கான்செப்ட் மாடலாக ஃபோக்ஸ்வேகன் இந்த காரை அறிவித்தது. கடந்த மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில்தான் இந்த கார் உற்பத்தி நிலைக்கு செல்ல இருப்பதாக அறிவித்தது.

Most Read Articles
English summary
Owner McKinsey & Company Director Dr. Christian Malorny has become the firs proud owner of the most fuel efficient Volkswagen ever made the XL1. German carmaker has handed over the keys to the first XL1 hybrid during an event held at the Transparent Factory in Dresden, Germany. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X