இந்தியாவில் முதல் ஹைபிரிட் காரை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ!

By Saravana

இந்த ஆண்டு 9 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் எக்ஸ்5 எஸ்யூவியை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, பல புதிய மாடல்களை வரிசைக்கட்ட பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

அதில் முக்கியமானதாக 7 சீரிஸ் சொகுசு செடான் காரின் ஹைபிரிட் மாடல் கருதப்படுகிறது. அடுத்த மாதம் அந்த புதிய காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஆக்டிவ் ஹைபிரிட் என்றழைக்கப்படும் இந்த புதிய ஹைபிரிட் கார்தான் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முதல் ஹைபிரிட் கார்.

இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காருக்கு முன்னோட்டமாகவும், ஹைபிரிட் கார் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது பிஎம்டபிள்யூ.


7 சீரிஸ் காரின் ஹைபிரிட் மாடல்

7 சீரிஸ் காரின் ஹைபிரிட் மாடல்

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் தோற்றத்தை ஒத்திருக்கும். இந்த காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

பவர்

பவர்

பெட்ரோல் எஞ்சின் 320 எச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் திறன் கொண்டது. எலக்ட்ரிக் மோட்டார் மட்டும் அதிகபட்சமாக 55 எச்பி பவரையும், 210 என்எம் டார்க்கையும் அளிக்கும். 0- 100 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

கார்பன் வெளியேற்றம்

கார்பன் வெளியேற்றம்

இந்த ஹைபிரிட் சொகுசு கார் குறைவான கார்பன் புகையை வெளியேற்றும் சிறப்பு கொண்டது. மேலும், கூடுதல் மைலேஜை வழங்கும் என்பதும் இதன் சிறப்பம்சம். அதிக விற்பனை எண்ணிக்கையை எதிர்பார்க்க இயலாது. அதேசமயம், ஹைபிரிட் கார்கள் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர் மத்தியில் ஏற்படுத்தவே இந்த புதிய கார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக பிஎம்டபிள்யூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். ரூ.1.75 கோடி விலையில் இந்த புதிய ஹைபிரிட் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
BMW India recently launched its 2014 X5 in India now according to the German manufacturers plan to launch nine models in India for 2014. They will be now launching in July its 7-Series ActiveHybrid vehicle. This will be the German manufacturers first hybrid vehicle in the Indian subcontinent.
Story first published: Monday, June 2, 2014, 11:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X