இந்தியாவில் பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் உறுதியானது

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபிள்யூவின் புதிய ஐ8 ஹைபிரிட் கார் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

 

இதற்கான டீசர் படம் மற்றும் வீடியோ ஃபேஸ்புக் மற்றும் யூ ட்யூபில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த கார் இந்தியாவில் பிஎம்டபிள்யூவின் அதிக விலை கொண்ட கார் மாடலாக இருக்கும் என தெரிகிறது.

 முன்பதிவு முடிந்ததா?

முன்பதிவு முடிந்ததா?

இந்தியாவில் 7 அல்லது 8 ஐ8 கார்களை மட்டுமே முதலில் விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த 8 கார்களையும் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஏற்கனவே க்யூ கட்டிவிட்டார்களாம்.

டெலிவிரி

டெலிவிரி

இந்த ஆண்டு இறுதியில் இந்த கார்கள் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. எனவே, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் காரை வாங்க பிரியப்பட்டாலும், அடுத்த ஓர் ஆண்டுக்கு காத்திருக்க வேண்டும்.

பவர்

பவர்

கார்பன் ஃபைபர் பாடியுடன் கட்டமைக்கப்பட்ட இந்த கார் ஹைபிரிட் எரிபொருள் நுட்பம் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடல். பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாரில் இயங்கும் இந்த கார் அதிகபட்சமாக 362 எச்பி ஆற்றலையும், 570 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் கொண்டது.

 பெர்ஃபார்மென்ஸ்
 

பெர்ஃபார்மென்ஸ்

0- 100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் கடக்கும் திறன் கொண்டதாகவும், உச்சபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்திலும் செல்லும் திறன் வாய்ந்தது.

வீடியோ

ஐ8 கார் இந்தியா வருவதை உறுதிப்படுத்தும் வகையில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ.

Most Read Articles
 
English summary
It has been officially confirmed by BMW India. Bavarian Motor Works will be launching the i8 hybrid sports car in India at the 2014 Auto Expo next month. The automaker has done this through social media platforms, by the way of a teaser image on its Facebook fan page and a YouTube video.
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X