பிஎம்டபிள்யூ அரங்கை அலங்கரிக்கப் போகும் கார் மாடல்கள்!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபிள்யூ அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கும் கார் மாடல்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ அரங்கில் பல்வேறு புதிய மாடல்களும், மினி பிராண்டு கார் மாடல்களும் இடம்பெற இருக்கின்றன.

புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

பிஎம்டபிள்யூவின் புதிய மாடல்களாக ஐ8 ஹைபிரிட் கார், புதிய எம்6 கிராண்ட் கூபே, புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ஆகிய கார் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இவை பார்வையாளர்களை வெகுவாக கவரும் மாடலாக இருக்கும்.

 புதிய 3 சீரிஸ் மாடல்

புதிய 3 சீரிஸ் மாடல்

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிராண்ட் கூபே மாடலும் முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் தர உள்ளது.

 இதர மாடல்கள்

இதர மாடல்கள்

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ், 3 சீரிஸ், 5 சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3, இசட்4 மற்றும் 7 சீரிஸ் உள்ளிட்ட தற்போது விற்பனையில் இருந்து வரும் மாடல்களும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

மினி கார்கள்

மினி கார்கள்

பிஎம்டபிள்யூ கார்கள் மட்டுமின்றி, மினி பிராண்டு கார்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. 2014 மினி கூப்பர் மற்றும் மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஆகிய கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. தவிர, மினி கூப்பர் எஸ், மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள், மினி கூப்பர் எஸ் கன்ட்ரிமேன் மற்றும் மினி கூப்பர் டி கன்ட்ரிமேன் ஆகிய கார் மாடல்களையும் மிக நெருக்கமாக கண்டு ரசிக்கலாம்.

Most Read Articles
English summary
BMW India arguably has the most exciting launch lined up for the upcoming Auto Expo 2014. The German automaker plans to grab the limelight by bringing their ‘i' ‘M' ‘X' models. These are the BMW i8, the all new BMW M6 Gran Coupe and the all new BMW X5.
Story first published: Thursday, January 30, 2014, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X