இந்திய கார் மார்க்கெட்டை சீரியசாக எடுத்துக் கொண்ட பிஎம்டபிள்யூ

By Saravana

இந்திய கார் மார்க்கெட்டின் வர்த்தகத்தை மிக சீரியசாக எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது பிஎம்டபிள்யூ. சர்வதேச அளவில் அறிமுகமாகும் புதிய கார் மாடல்களை ஓர் ஆண்டு அல்லது அதற்கு மேலான இடைவெளியில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை பிஎம்டபிள்யூ வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால், தற்போது சில கார் மாடல்களை உடனடியாக இந்தியாவுக்கு தருவித்து விடுகிறது.

மேலும், இந்த ஆண்டு பல புதிய கார் மாடல்களையும் வரிசை கட்ட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் அதிக வர்த்தக வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்டும், போட்டியாளர்களை சமாளிக்கும் விதத்திலும் பல புதிய மாடல்களை இறக்கி வருகிறது.

இருதினங்களுக்கு முன் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் பிலிப் வான் சர் சில முக்கியத் தகவல்களை வெளியிட்டார். அதில், இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் கார் மாடல்கள் குறித்தும் சில தகவல்களை உறுதிப்படுத்தினார்.


ஐ8 ஸ்போர்ட்ஸ் கார்

ஐ8 ஸ்போர்ட்ஸ் கார்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. விற்பனைக்கு வருவதற்கு முன்னரே முன்பதிவில் மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கும் இந்த காரை சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லும் அதே நேரத்தில், சில மாத இடைவெளியில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 ஐ8 சிறப்புகள்

ஐ8 சிறப்புகள்

கார்பன் ஃபைபர் பாடி மற்றும் இலகு பாகங்கள் கொண்ட இந்த புதிய ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 0- 100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும், இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

 பெர்ஃபார்மென்ஸ் மாடல்கள்

பெர்ஃபார்மென்ஸ் மாடல்கள்

எம் வரிசையில் எம்3 மற்றும் எம்4 ஆகிய கார் மாடல்களை இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது பிஎம்டபிள்யூ. இவை இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

புதிய பிஎம்டபிள்யூ எம்3

புதிய பிஎம்டபிள்யூ எம்3

எம்3 காரில் 425 எச்பி ஆற்றலை வழங்கும் 3.0 லிட்டர் ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது. அதிக அளவில் கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

புதிய மினி கார்

புதிய மினி கார்

பிஎம்டபிள்யூவின் அங்கமான மினி பிராண்டு தனது புதிய மாடலை இந்த ஆண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. தோற்றத்தில் அழகு கூடியிருக்கும் புதிய மினி கூப்பர் கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

புதிய மினி காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.

Most Read Articles
English summary
The German auto manufacturer, BMW, has just launched the 2014 version of the X5 SUV in India, but there are still many more products to come this year. Philipp von Sahr, president of BMW India, has confirmed BMW will surprise this year.
Story first published: Saturday, May 31, 2014, 10:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X