வெற்றிகரமான 30 ஆண்டுகள்... ஸ்பெஷல் பிஎம்டபிள்யூ எம்5 கார் அறிமுகம்
பிஎம்டபிள்யூ எம்5 கார் அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவுபெறுவதை கொண்டாடும் வகையில், ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ எம்5 30 ஜாரி எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது.
இந்த புதிய பிஎம்டபிள்யூ எம்5 காரில் 600 எச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் அளிக்கும் ட்வின் டர்போ கொண்ட 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடும் ஆற்றல் வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெற்றிகரமான மாடல்
வெற்றிகரமான மாடல்
1984ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிஎம்டபிள்யூ எம்5 கார் வெற்றிகரமாக 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக 300 எம்5 30 ஜாரி ஸ்பெஷல் எடிசன் கார்களை விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.
முகப்பு
முகப்பு
புதிய பிஎம்டபிள்யூ எம்5 30 ஜாரி எடிசனில் விற்பனை செய்யப்பட உள்ள 300 கார்களும் சில்வர் மெட்டாலிக் வண்ணம் கொண்டதாக இருக்கும். முகப்பு கிரில்லில் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் கொண்டிருக்கும். மேலும், சாதாரண எம்5 காரை விட இந்த காரின் கம்பீரத்தை கூட்டும் விதத்திலான வேலைப்பாடுகளையும் பிஎம்டபிள்யூ செய்துள்ளது.
சிறப்பு பேட்ஜ்
சிறப்பு பேட்ஜ்
காரின் பல பகுதிகளிலும் ஸ்பெஷல் எடிசன் மாடலாக வேறுபடுத்துவதற்கான சிறப்பு பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளன. படத்தில் காரின் காக்பிட்டிற்குள் நுழைவதற்கான இடத்தில் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் பட்டை பொருத்தப்பட்டுள்ளது.
கவரும் சக்கரங்கள்
கவரும் சக்கரங்கள்
இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் 7 ஸ்போக்குகள் கொண்ட 19 இஞ்ச் இரட்டை வண்ணக் கலவை கொண்ட இலகு அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பிரேக் காலிபரில் எம்5 பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.
இருக்கைகள்
இருக்கைகள்
பல்வேறு வசதிகளை தரும் மல்டிஃபங்ஷன் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. தரமிக்க லெதர் இருக்கைகள் காரின் இன்டிரியர் அந்தஸ்தை கூட்டுகிறது. பயணிகளுக்கு மிக சொகுசான அனுபவத்தை இந்த இருக்கைகள் வழங்கும்.
இன்டிரியர்
இன்டிரியர்
16 ஸ்பீக்கர் ஹார்மன்/கார்டன் மியூசிக் சிஸ்டம்ஸ், ஆப்ஷனலாக ஒலூஃப்சென் 1200 வாட் ஆடியோ சிஸ்டத்தை பெற்று கொள்ளலாம். ஒவ்வொரு பயணத்தையும் இனிதாக்கும் வகையில் இன்டிரியர் பார்தது பார்த்து செய்துள்ளனர்.
பின்புற தோற்றம்
பின்புற தோற்றம்
பின்புறத்தில் டிஃபியூசர், இரட்டை குழல் சைலென்சர் ஆகியவை முக்கிய அம்சங்கல். இந்த ஸ்பெஷல் எடிசன் பிஎம்டபிள்யூ எம்5 சொகுசு கார் 91,890 பவுண்ட் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ!
Post by DriveSpark Tamil.
Most Read Articles
English summary
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X