சென்னை ஆலையில் 40,000 கார்களை உற்பத்தி செய்த பிஎம்டபிள்யூ

By Saravana

சென்னை ஆலையில் 40,000 கார்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது பிஎம்டபிள்யூ சொகுசு கார் நிறுவனம்.

கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவில் நேரடியாக வர்த்தகத்தை துவங்கியது ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம்.

BMW Car

இதைத்தொடர்ந்து, 2007ம் ஆண்டு சென்னையில் புதிய கார் உற்பத்தி ஆலையை நிறுவியது. இதன்மூலம், இறக்குமதி வரியை தவிர்த்து பல சொகுசு கார்களை சரியான விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பை பெற்றது.

ஆண்டுக்கு 11,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில் தற்போது இரண்டு ஷிப்ட்டுகளில் கார் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆலையில் இதுவரை 40,000 கார்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

வெள்ளை நிற பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் உற்பத்தி பிரிவிலிருந்து 40,000 காராக வெளிவந்தது. தற்போது சென்னை ஆலையில் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ், 3 சீரிஸ், 3 சிரீஸ் கிரான்ட் டூரிஷ்மோ, 5 சீரிஸ், 7 சீரிஸ் கார்களையும், பிஎம்டபிள்யூ எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5 போன்ற எஸ்யூவி ரக வாகனங்களையும் அசெம்பிள் செய்து வருகிறது.

மேலும், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கீழ் செயல்படும் மினி கார் நிறுவனத்தின் கன்ட்ரிமேன் காரையும் இங்கு அசெம்பிள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The German automobile giant BMW has confirmed its 40,000th vehicle rollout from their Chennai facility in India. The milestone vehicle manufactured is a 5 Series, which received a white paint scheme.
Story first published: Saturday, November 1, 2014, 16:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X