டிரைவர் உதவியின்றி 'டிரிஃப்ட் வித்தை காட்டும் பிஎம்டபிள்யூ கார்!

டிரைவர் இல்லாமல் டிரிஃப்ட் செய்யும் உலகின் முதல் காரை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் மின்னணு சாதனக் கண்காட்சியில் இந்த கார் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

எம்235ஐ கூபே காரில் தனது பிரத்யேக தானியங்கி தொழில்நுட்பத்தை புகுத்தி இவ்வாறு டிரைவரில்லாமல் இயங்கும் காராக மாற்றியுள்ளது பிஎம்டபிள்யூ. இதற்காக, இந்த காரில் பல விசேஷ கருவிகள், தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

BMW Self Driving Car

இந்த புரொட்டோடைப் காரில் 360 டிகிரி ஸ்டீரியோ கேமரா தொழில்நுட்பம், அல்ட்ராசோனிக் ரேடார், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சிஸ்டம் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

வளைவுகளில் அதிவேகத்தில் மிக லாவகமாக திரும்பும் இந்த கார் டிரிஃப்ட் செய்தும் அசத்துகிறது. ஜெர்மனியின் மூனிச் நகரில் வைத்து இதுவரை 9,000 மைல்கள் இந்த காரை சோதனை நடத்தியுள்ளனர். இருப்பினும், இன்னமும் பாதுகாப்பு சோதனைகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த காரின் செயல்விளக்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
<center><center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/IL_enMPWT7s" frameborder="0" allowfullscreen></iframe></center></center>

Most Read Articles
English summary
Get over those boring, slow straight line driving, highway cruising self driving cars. BMW awed everyone present during its Consumer Electronic Show (CES) demonstration with the world's first self drifting car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X