மே29ல் இந்தியாவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ஃபேஸ்லிஃப்ட் மாடல்

By Saravana

வரும் 29ந் தேதி மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 6 சிலிண்டர் கொண்ட 3.0 லிட்டர் எக்ஸ்ட்ரைவ்30டி டீசல் எஞ்சின் 19 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும். தவிர, 13 பிஎச்பி பவரும், 20 என்எம் டார்க்கையும் கூடுதலாக வழங்கும்.

BMW X5 Facelift

இதேபோன்று, பெட்ரோல் மாடலில் புதிய தலைமுறை 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. முந்தைய எஞ்சினைவிட இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் 41 பிஎச்பி பவரும், 50 என்எம் டார்க்கையும் கூடுதலாக வழங்கும்.

சாதாரண சாலை, ஆஃப்ரோடு போன்றவற்றிற்கு தகுந்தவாறு டிரைவிங் தன்மையை மாற்றிக் கொள்வதற்காக டைனமிக் கன்ட்ரோல் சுவிட்ச் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கும். சஸ்பென்ஷன், ஸ்டீயரிங், ஆக்சிலரேசன் ஆகிய அனைத்தையும் ஒருங்கே கட்டுப்படுத்தும் திறன் கொண்டது இந்த வசதி.

இதுதவிர, எண்ணற்ற சிறப்பம்சங்களுடன் வருகிறது. இந்த எஸ்யூவியின் பூட் ரூம் 650 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதனை இருக்கைகளை மடக்குவதன் மூலம் 1,870 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக மாற்றிக் கொள்ள முடியும்.

Most Read Articles
English summary
May 29, 2014 marks the date when BMW will be launching their third generation X5 SUV in India.
Story first published: Saturday, May 17, 2014, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X