பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியின் புதிய பேஸ் மாடல் அறிமுகம்

By Saravana

ரூ.6 லட்சம் குறைவான விலையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு எஸ்யூவியின் புதிய பேஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடநத் மே மாதம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.70.9 லட்சத்தில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

BMW X5

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு எஸ்யூவியின் புதிய பேஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பேஸ் மாடல் ரூ.64.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். எக்ஸ்படிஷன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மால் தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட ரூ.6 லட்சம் குறைவான விலையில் வந்துள்ளது.

விலை குறைப்புக்கு தகுந்தவாறு பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பேஸ் மாடலில் விலக்கப்பட்டுள்ளது. இது 5 சீட்டர் மாடலாக கிடைக்கும். மேலும், பிஎம்டபிள்யூ ஆப்ஸ் வசதி, நேவிகேஷன் சிஸ்டம் போன்ற பிரத்யேக பிஎம்டபிள்யூ சாதனங்களும், வசதிகளும் குறைக்கப்பட்டுள்ளன. பல வசதிகளும், மதிப்பு கூட்டு அம்சங்களும் குறைக்கப்பட்டாலும், எஞ்சினில் மாற்றம் இல்லை.

தற்போதைய மாடலில் இருக்கும் அதே 3.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் உயிர் கொடுக்கிறது. இந்த எஞ்சின் 258 பிஎச்பி ஆற்றலையும், 560 என்எம் டார்க்கையும் அளிக்கும். 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதாக வந்துள்ள இந்த புதிய பேஸ் மாடலில் பேடில் ஷிப்ட் வசதியும் இருக்காது.

Most Read Articles
English summary
German luxury car maker BMW has launched new X5 base variant at Rs. 64.9 lakhs ex showroom India.
Story first published: Monday, July 28, 2014, 9:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X