எஞ்சினுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் புதிய கேஸ்ட்ரால் ஆயில்!

By Saravana

நகர்ப்புறத்திலும், அதிக போக்குவரத்து நெரிசலிலும் செல்லும்போது கார் எஞ்சினுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் விதத்தில் விசேஷமான புதிய ஆயிலை கேஸ்ட்ரால் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சிக்னல்களில் அடிக்கடி நின்று செல்வதாலும், கடுமையான போக்குவரத்து நெரிசலிலும் கார் எஞ்சினில் அதிக உராய்வுகள் ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், எஞ்சினில் பிரச்னைகள் ஏற்படுவதோடு, எஞ்சின் ஆயுட்காலம் வெகுவாக குறைகிறது.

Castrol Oil

இதனை தவிர்க்கும் விதத்தில் புதிய ஃபார்முலாவில் தயாரிக்கப்பட்ட எஞ்சின் ஆயிலை கேஸ்ட்ரால் வெளியிட்டுள்ளது. எஞ்சினில் உராய்வு காரணமாக ஏற்படும் பாதிப்புகளை இந்த ஆயிலில் இருக்கும் விசேஷ உயவுப் பொருட்கள் எஞ்சினுக்குள் ஒரு மேற்பூச்சை உருவாக்கி பாதிப்புகளை குறைக்கும்.

எஞ்சினுக்குள் ஆயில் உருவாக்கும் பூச்சு நீங்கிவிட்டாலும், காந்தம் போன்று எஞ்சினுக்குள் புதிதாக ஒரு மேற்பூச்சு உருவாக்கிக் கொள்ளும் ஃபார்முலாவில் இந்த ஆயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நகர்ப்புறத்தில் பயன்படுத்தப்படும் கார்களுக்காகவே இந்த புதிய ஆயிலை அறிமுகம் செய்துள்ளதாக கேஸ்ட்ரால் நிறுவனம் தெரிவித்துள்ளது. கேஸ்ட்ரால் மேக்னாடெக் ஸ்டார்ட்- ஸ்டாப் என்ற பெயரில் இந்த புதிய எஞ்சின் ஆயில் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Castrol, one of the world’s leading engine oil manufacturers, has launched an innovative solution to an everyday city driving problem – Castrol MAGNATEC STOP-START - a new engine oil which protects cars from engine wear caused by stop-start city driving.
Story first published: Wednesday, July 2, 2014, 14:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X