இந்தியாவின் மிக குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் கார்கள்!

போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டி சோர்ந்து போனவர்களுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்கள் வரப்பிரசாதமாக இருக்கின்றன. ஆனால், ஆட்டோமேட்டிக் கார்களின் விலை பெரும்பாலான வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்குள் அடங்க மறுக்கிறது.

இதனால், பல வாடிக்கையாளர்கள் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை வாங்கி மனதையும், உடலையும் பக்குவப்படுத்திக் கொள்கின்றனர். இந்த நிலையில், தற்போது குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் கார்களின் வருகை அதிகரித்து வருகிறது.

அதில், தற்போது மார்க்கெட்டில் இருக்கும் குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் கார்களின் விபரங்களை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம். மேலும், ஏஎம்டி என்ற புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களின் விலை, மைலேஜ் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. எனவே, வரும் நாட்களில் இந்திய சாலைகளில் ஆட்டோமேட்டிக் கார்களின் ஆதிக்கம் மேலோங்கும் வாய்ப்பு அதிகமிருக்கிறது.


பட்டியல்

பட்டியல்

எக்ஸ்ஷோரூம் விலையின் அடிப்படையில் இந்த செய்தி தொகுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் கார்களின் விபரங்களை பார்க்கலாம்.

 7.டாடா ஸெஸ்ட்

7.டாடா ஸெஸ்ட்

. டீசல் மாடலில் மிகவும் குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் கார் டாடா ஸெஸ்ட். செலிரியோவுக்கு அடுத்ததாக ஏஎம்டி என்ற புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வந்திருக்கிறது. மேலும், சில பெட்ரோல் ஹேட்ச்பேக் கார்களின் விலையுடன் போட்டி போடும் அளவுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது இந்த காருக்கு பக்கபலம். ரூ.6.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறைவான பராமரிப்பு செலவு, சரியான விலையிலான டீசல் ஆட்டோமேட்டிக் காராக வந்திருப்பதால், வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

6.நிசான் மைக்ரா

6.நிசான் மைக்ரா

சிறந்த ஆட்டோமேட்டிக் கார் என்று மார்க்கெட்டில் நன்மதிப்பை பெற்ற மாடல். காரணம், இதில் மிகவும் சிறப்பும் செயல்திறனும் வாய்ந்த சிவிடி டிரான்ஸ்மிஷன் பொருத்தப்ப்டடுள்ளது. 75 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலில் கிடைக்கிறது. லிட்டருக்கு 19.34 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று தெரிவிக்கிறது. ரூ.6.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

 5.ஹோண்டா பிரியோ

5.ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ காரில் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில், பொருத்தப்பட்டிருக்கும் ஐ- விடெக் பெட்ரோல் எஞ்சின் 87 பிஎச்பி பவரை அளிக்கும். இது லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. சிறப்பான இடவசதி, நம்பகத்தன்மை வாய்ந்த எஞ்சின் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். ரூ.5.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

4.மாருதி ரிட்ஸ்

4.மாருதி ரிட்ஸ்

செயல்திறனுக்கு பெயர்பெற்ற மாருதி ரிட்ஸ் காரில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கிறது. 85 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 17.16 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது. ரூ.5.76 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. செலிரியோ வரவால் இந்த காரின் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் ஆட்டோமொபைல் வட்டாரத்தில் அடிபட்டு கொண்டிருக்கிறது.

3.ஹூண்டாய் கிராண்ட் ஐ10

3.ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புளூயிடிக் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரில் 81 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சரியான விலையில் கிடைக்கும் சிறந்த ஆட்டோமேட்டிக் கார். லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. ரூ.5.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 2.மாருதி செலிரியோ

2.மாருதி செலிரியோ

இன்ஸ்டன்ட் ஹிட் அடித்த மாடல் இது. குறிப்பாக, இந்த காரில் அறிமுகம் செய்யப்பட்ட ஏஎம்டி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு அமோக வரவேற்பு. இதனால், தேவையை சமாளிக்க முடியாத நிலையில் மாருதி தவித்தது. இந்த காரில் 67 பிஎச்பி பவரை அளிக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜ் தரும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். ரூ.4.14 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் செலிரியோதான் தற்போது மிக குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் கார். ஆனால், இந்த பெருமை விரைவில் மாருதி ஆல்ட்டோ கே10 காரிடம் செல்ல இருக்கிறது.

 1.மாருதி ஆல்ட்டோ கே10

1.மாருதி ஆல்ட்டோ கே10

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஆல்ட்டோ கே10 காரில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலும் வர இருக்கிறது. செலிரியோவின் ஆட்டோமேட்டிக் மாடலைவிட குறைவான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ரூ.4 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்படலாம். அவ்வாறு நிர்ணயிக்கப்பட்டால், இந்தியாவின் மிக மிக குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் கார் என்ற பெருமையை பெறும்.

 மஹிந்திரா இ2ஓ

மஹிந்திரா இ2ஓ

இந்த பட்டியலில் மஹிந்திரா இ2ஓ காருக்கும் இடமுண்டு. ஆனால், தமிழகத்தில் இதுவரை விற்பனைக்கு வரவில்லை. எனினும், மஹிந்திரா இ2ஓ விற்பனை செய்யப்படும் பிற நகரங்களில் இருக்கும் வாசகர்களுக்காக இந்த விபரங்களை அளிக்கிறோம். இந்தியாவில் விற்பனையாகும் ஒரே எலக்ட்ரிக் கார் மாடலான மஹிந்திரா இ2ஓ காரில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.5.96 லட்சத்தில் கிடைக்கும் இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. நகர்ப்புறத்தில் மட்டும் பயன்படுத்தும் வசதி கொண்ட இந்த காருக்கு அரசு மானியம் வழங்கினால், நல்லதொரு சாய்ஸ் என்று ஆணித்தரமாக

Most Read Articles
English summary
Here is a list of lowest priced automatic cars in india.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X