புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் டைப் ஆர் கான்செப்ட் டீசர் வெளியீடு

அடுத்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும், அடுத்த தலைமுறை ஹோண்டா சிவிக் டைப் ஆர் ஹேட்ச்பேக் கார் கான்செப்ட்டின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

சிவிக் டைப் ஆர் கான்செப்ட் மாடலின் பின்புறம் மிக அசத்தலாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பின்புற வைன்ட்ஷீல்டை மறைக்கும் அளவுக்கு பெரிய ரியர் ஸ்பாய்லர் மற்றும் எக்ஸாஸ்ட் குழாய்கள் காரின் தோற்றத்தை படு கவர்ச்சியாக மாற்றியிருக்கிறது.

Honda Civic Type R

தற்போதைய சிவிக் டைப் ஆர் காரில் 200 பிஎஸ் பவரையும், 192 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், புதிய தலைமுறை மாடலில் 300 பிஎஸ் பவர் கொண்டதாக எஞ்சின் மேம்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, 1338 கிலோ எடை கொண்ட தற்போதைய மாடல் 0-100 கிமீ வேகத்தை 6.4 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. புதிய தலைமுறை மாடல் இதைவிட வேகமாக கடக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

Most Read Articles
English summary
Honda has now teased next-gen Civic that it will debut at the Geneva Motor Show in concept form. The teaser image previews the Civic Type-R concept from the rear end and for good reason.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X