இதுவரை அறிமுகமான கார் மாடல்கள் - ஒரு பார்வை

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ துவங்குவதற்கு முன்னதாகவே போட்டிப் போட்டுக் கொண்டு கார் மாடல்களை அறிமுகப்படுயுள்ளன முன்னணி கார் நிறுவனங்கள். இதில், மூன்று கார்கள் காம்பெக்ட் செடான் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், இந்த ஆண்டு காம்பெக்ட் செடான் மார்க்கெட்டில் ஏற்படப்போகும் போட்டியை உணர்ந்து கொள்ளலாம். டாடா ஸெஸ்ட், ஃபோர்டு ஃபிகோ கான்செப்ட் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஆகிய கார் மாடல்கள் தற்போது புதிய காம்பெக்ட் செடான் மாடல்களாக வந்துள்ளன.

இவை அனைத்துமே மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெறும் என்று நம்பலாம். இதுதவிர, புதிய தலைமுறை விஸ்டாவாக போல்ட் என்ற ஹேட்ச்பேக் காரையும் டாடா அறிமுகம் செய்துள்ளது. இதுவரை அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 4 கார் மாடல்கள் பற்றிய சுருக்கமான விபரங்கள்.

 டாடா போல்ட்

டாடா போல்ட்

டாடா விஸ்டாவின் இடத்தை நிரப்ப வந்துள்ள புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடல்தான் போல்ட். இதன் டிசைன் நிச்சயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பழைய முகத்தை மாற்றும் என்பது உறுதியாக கூறலாம். நவீனத்துவ டிசைன் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் வருகிறது. ஹூண்டாய் ஐ20 மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ கார்களுக்கு போட்டியாக வரும்.

 டாடா ஸெஸ்ட்

டாடா ஸெஸ்ட்

இண்டிகோ இசிஎஸ் காரைத் தொடர்ந்து, காம்பெக்ட் செடான் மார்க்கெட்டில் புத்தம் புதிய மாடலாக ஸெஸ்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது டாடா. முதல்முறையாக டீசல் மாடலில் கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலாக வருகிறது. சிறப்பான டிசைன் மற்றும் போல்ட் காரைப் போன்றே பல்வேறு வசதிகளை இந்த கார் கொண்டிருக்கும். இது நிச்சயம் பெரிய வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வருகிறது.

ஃபோர்டு ஃபிகோ கான்செப்ட்

ஃபோர்டு ஃபிகோ கான்செப்ட்

ஃபோர்டு நிறுவனத்தின் புத்தம் புதிய காம்பெக்ட் செடான் மாடல் கான்செப்ட் இது. கா கான்செப்ட் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. ஈக்கோஸ்போர்ட்டுக்கு அடுத்து ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து பெரிய வரவேற்பை பெறும் மாடலாக கருதப்படுகிறது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

கடந்த 2 நாட்களில் அறிமுகம் செய்யப்பட்ட 3வது காம்பெக்ட் செடான் மாடல் இது. ஆக்சென்ட் செடானுக்கு மாற்றாக இந்த எக்ஸ்சென்ட் காம்பெக்ட் செடானை நிலைநிறுத்துகிறது ஹூண்டாய். அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. பெட்ரோல் மற்றும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது.

Most Read Articles
English summary
Compact sedan and hatchback reveals ruled the week ahead of the 2014 Auto Expo with automakers rushing to showcase their cars ahead of the two eventful days to prevent being overshadowed.
Story first published: Wednesday, February 5, 2014, 8:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X