டஸ்ட்டர் எஸ்யூவின் பிக்கப் டிரக் மாடல் சோதனை ஓட்டம்

By Saravana

ஐரோப்பாவில் டஸ்ட்டர் எஸ்யூவியின் பிக்கப் டிரக் மாடல் சாலை சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. முக்காடு போடாமல் கரடு முரடான சாலைகளில் வைத்து இந்த புதிய பிக்கப் டிரக் மாடல் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், ரெனோவின் அங்கமான டேஸியா பிராண்டு பேட்ஜுடன் அந்த டஸ்ட்டர் பிக்கப் டிரக் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய மாடல் விரைவில் தயாரிப்புக்கு செல்லும் அளவிற்கான அம்சங்களை கொண்டுள்ளது.


 லோஹன் பிக்கப் டிரக்

லோஹன் பிக்கப் டிரக்

சில ஆண்டுகளுக்கு முன் லோஹன் காரின் பிக்கப் டிரக் மாடலின் விற்பனையை ரெனோ நிறுத்தியது. சில ஆண்டுகளுக்கு பின்னர் உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் டஸ்ட்டர் எஸ்யூவியின் பிக்கப் டிரக் மாடலாக இது வருகிறது.

ரெனோ பிராண்டு

ரெனோ பிராண்டு

பாடி கலர் பம்பர்கள் இல்லை என்பதால் தயாரிப்பு செலவீனத்தை கட்டுப்படுத்த ரெனோ முடிவு செய்துள்ளது. டேஸியா பிராண்டில் தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய டஸ்ட்டர் பிக்கப் டிரக் மாடல் விரைவில் ரெனோ பிராண்டிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பு நிலை மாடல்

தயாரிப்பு நிலை மாடல்

சோதனை செய்யப்பட்டு வரும் புதிய டஸ்ட்டர் பிக்கப் டிரக் மாடல் தயாரிப்பு நிலைக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. அக்டோபரில் நடைபெற இருக்கும் பாரீஸ் மோட்டார் ஷோவில் இந்த புதிய டஸ்ட்டர் பிக்கப் டிரக் மாடலை ரெனோ அறிமுகப்படுத்தும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

 எஞ்சின்

எஞ்சின்

தற்போது டஸ்ட்டர் எஸ்யூவியில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் இந்த புதிய பிக்கப் டிரக் மாடல் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் மாடல்களிலும் கிடைக்கும்.

இந்தியா வர அதிக வாய்ப்பு

இந்தியா வர அதிக வாய்ப்பு

டஸ்ட்டருக்கு பெரிய ஹிட் கொடுத்த பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளை குறித்து வைத்து இந்த புதிய பிக்கப் டிரக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிரேசில் மார்க்கெட்டில் முதலில் விற்பனைக்கு வரும் என ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

உற்பத்தி

உற்பத்தி

இந்த புதிய பிக்கப் டிரக் முதலில் ரெனோவின் மொராக்கோ ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Photo Source: DaciaOltcitAro

Most Read Articles
English summary
A Dacia Duster pick-up prototype has been spied without any camouflage in Europe.
Story first published: Tuesday, August 12, 2014, 16:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X