சென்னையிலிருந்து டஸ்ட்டர் உற்பத்தியை ருமேனியாவுக்கு மாற்றும் ரெனோ!

By Saravana

இங்கிலாந்து மார்க்கெட்டுக்கான டேஸியா டஸ்ட்டர் எஸ்யூவியின் உற்பத்தி சென்னை ஆலையிலிருந்து ருமேனியாவில் உள்ள டேஸியா ஆலைக்கு மாற்றப்பட உள்ளது.

சென்னை ஆலையில் உற்பத்தி செய்து டேஸியா பிராண்டில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் டஸ்ட்டர் எஸ்யூவிகளின் பானட் மற்றும் டோர் சில்கள் துருப்பிடிப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் வந்துள்ளது.

Dacia Duster

இதுவரை இங்கிலாந்தில் 90க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இதுகுறித்து புகார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை ஆலையிலிருந்து ருமேனியாவில் உள்ள டேஸியா ஆலைக்கு டஸ்ட்டர் எஸ்யூவியின் உற்பத்தியை மாற்றுவதற்கு ரெனோ முடிவு செய்துள்ளது.

ஆனால், போக்குவரத்து மற்றும் உற்பத்தி செலவீனத்தை கருதி டஸ்ட்டர் உற்பத்தியை ருமேனியாவுக்கு மாற்ற இருப்பதாக ரெனோ தெரிவிக்கிறது. இன்னும் சில மாதங்களில் சென்னையிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் டஸ்ட்டர் எஸ்யூவியின் உற்பத்தி ருமேனியா ஆலைக்கு மாற்றப்படும். அந்த ஆலையில் ஏற்கனவே இடதுபக்க டிரைவிங் கொண்ட டஸ்ட்டர் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Right-hand drive Dacia Duster SUVs for the UK market are no longer built in India, as production was moved to the brand’s core plant in Romania.
Story first published: Friday, September 19, 2014, 18:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X