சென்னை டெய்ம்லர் ஆலையில் 20,000 டிரக்குகள் உற்பத்தி!

சென்னையிலுள்ள டெய்ம்லர் டிரக் தயாரிப்பு ஆலை உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. உற்பத்தி துவங்கப்பட்டது முதல் இதுவரை 20,000 டிரக்குகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் வாகன உற்பத்தியில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. பாரத் பென்ஸ் என்ற பிராண்டில் இந்தியாவில் டிரக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

Bharat Benz Truck

கடந்த 2012ம் ஆண்டு சென்னை அருகே ஒரகடத்தில், டெய்ம்லர் நிறுவனத்தின் டிரக் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது. 400 ஏக்கர் பரப்பளவில் ரூ.4,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட இந்த தொழிற்சாலையை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த நிலையில், ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆலையில் 20,000 டிரக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.

குறுகிய காலத்தில் ஒரகடம் ஆலையில் 20,000 டிரக்குகள் தயாரிக்கப்பட்டிருப்பது எங்களது உற்பத்தி அமைப்பின் தரத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். இது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது என்று டெய்ம்லர் இந்தியா தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Daimler India Commercial Vehicles Pvt. Ltd. (DICV) the 100 percent wholly-owned subsidiary of Daimler AG today crossed the milestone of the 20,000th locally produced trucks from its plant at Oragadam.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X