ரூ.4.42 லட்சத்தில் இந்தோனேஷியாவில் டட்சன் எம்பிவி கார்: அப்போ இந்தியாவுக்கு?

By Saravana

இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டட்சன் கோ ப்ளஸ் பன்கா என்ற பெயரில் அங்கு அறிமுகமாகியிருக்கும் இந்த கார் மிக சவாலான விலையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்திய மார்க்கெட்டிலும் மிக சவாலான விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை பற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்க ஸ்லைடருக்கு வாருங்கள்.

செய்தியின் தொடர்ச்சி ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

மலிவு விலை மாக்கான்

மலிவு விலை மாக்கான்

மிக மலிவான விலையில் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு ஓர் சிறந்த எம்பிவி காராக இதனை குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, இந்தியாவின் நடுத்தர பிரிவு வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த காரை டட்சன் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. சில கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

டட்சன் கோ ஹேட்ச்பேக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய எம்பிவி காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 68 எச்பி பவரை அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

இடவசதி

இடவசதி

7 பேர் பயணிக்கும் வசதியை தரும் இருக்கை அமைப்பு கொண்டது டட்சன் கோ ப்ளஸ் பன்கா. மலிவான விலை கொண்ட எம்பிவி காராக வரும் இந்த காரின் முதல் இரண்டு இருக்கைகளும் சிறப்பான இடவசதியையும், மூன்றாவது வரிசை சிறியவர்கள் அமர்ந்து பயணிக்க ஏதுவாக இருக்கும்.

வசதிகள்

வசதிகள்

முன் வரிசை இருக்கையில் அதிக இடவசதியை அளிக்கும் இணைப்பு இருக்கை, காரின் வேகத்துக்கு தகுந்தவாறு வேகத்தை கூட்டி குறைத்துக் கொள்ளும் ஸ்பீடு சென்சிங் வைப்பர்கள், பல்வேறு தகவல்களை பெற உதவும் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, இரவில் காரை நிறுத்திவிட்டு இறங்கியவுடன் வழிகாட்டும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள் போன்ற சிறப்பு வசதிகளை இந்த கார் கொண்டிருக்கிறது. இதுதவிர, மொபைல் டாக்கிங் ஸ்டேஷனும் உண்டு. இதே வசதிகள் இந்திய மாடலிலும் வரும் என்று தெரிகிறது.

 விலை

விலை

இந்தோனேஷியாவில் 85 மில்லியன் ரூபியா மதிப்பில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தொகையை இந்திய தொகையில் மாற்றினால் ரூ.4.42 லட்சம் விலை கொண்டதாக இருக்கிறது. எப்படியும் இந்தியாவில் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் வரும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Most Read Articles
English summary

 Datsun had revealed their MPV vehicle named the GO+ at the 2014 Auto Expo held in Greater Noida, Delhi. The Japanese car manufacturer has launched their new MPV in Indonesia as the GO+ Panca. This is the same vehicle that will be offered in India in the coming months.
Story first published: Monday, May 12, 2014, 16:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X