ரூ.5 லட்சத்தில் குடும்பத்தில் எல்லோரையும் அழைத்துச் செல்லும் டட்சன் எம்பிவி கார்!

By Saravana

குறைவான விலையில் டட்சன் பிராண்டில் வர இருக்கும் புதிய எம்பிவி கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மிகச்சிறப்பான இடவசதியுடன் வர இருக்கும் இந்த புதிய கார் எம்பிவி மார்க்கெட்டில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

 4 மீட்டர் எம்பிவி

4 மீட்டர் எம்பிவி

7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த கார் வெறும் 4 மீட்டர் மட்டுமே நீளம் கொண்டதாக மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளது டட்சன்.

குறைவான விலை

குறைவான விலை

மாருதி எர்டிகா, விரைவில் வரும் ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார்களைவிட குறைவான விலையில் வர இருக்கிறது. ரூ.5 லட்சத்தில் இந்த புதிய எம்பிவி கார் வர இருக்கிறது.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

2+3+3 இருக்கை அமைப்புடன் வருகிறது.மூன்றாவது வரிசையில் சிறியவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

மைக்ரா காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டு வருகிறது. இது 68 பிஎஸ் பவரையும், 104 என்எம் டார்க்கையும் அளிப்பதாக இருக்கும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த கார் 794 கிலோ எடை கொண்டது. மாருதி எர்டிகாவைவிட 386 கிலோ குறைவான எடை கொண்டது என்பதால் நிச்சயம் நல்ல மைலேஜை வழங்கும்.

 தயாரிப்பு செலவீனம்

தயாரிப்பு செலவீனம்

இந்த எம்பிவி காரில் 13 அங்குல ரிம் மற்றும் 155/70 டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும். சிறிய வடிவிலான இந்த சக்கரங்கள் மூலம் உற்பத்தி செலவீனம் குறைவாக இருக்கும். இதுபோன்ற விஷயங்களால், இந்த காரை மார்க்கெட்டிலேயே மிகக் குறைந்த விலை கொண்ட எம்பிவி காராக நிலைநிறத்தும் வாய்ப்பு டட்சனுக்கு கிடைத்துள்ளது.

Most Read Articles
Story first published: Thursday, February 6, 2014, 9:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X