5 லட்ச ரூபாய் டட்சன் 7 சீட்டர் கார் ஜனவரியில் ரிலீஸ்... வெயிட் பண்ணலாம்!

By Saravana

பெரிதும் எதிர்பார்க்கப்படும் டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரின் உற்பத்தி சென்னையிலுள்ள நிசான்- ரெனோ கூட்டணி ஆலையில் துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார் வரும் ஜனவரியில் விற்பனைக்கு வருகிறது.

ரூ.5 லட்சத்திற்குள் வருவதாக வெளியான தகவல்களால் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. மேலும், பெட்ரோல் மட்டுமின்றி டீசல் மாடலிலும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்ரன.


 நீளம் அதிகம்

நீளம் அதிகம்

கோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில்தான் இந்த புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கார்களின் வீல்பேஸ் ஒன்றுதான். ஆனால், டட்சன் கோ ப்ளஸ் காரின் ஒட்டுமொத்த நீளம் 210மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மூன்றாவது இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், 4 மீட்டருக்கும் குறைவான எம்பிவியாக வருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

கோ ஹேட்ச்பேக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மைக்ரா காரில் செயலாற்றும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினுடன் இந்த கார் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 800 கிலோ மட்டுமே எடை கொண்ட இந்த எம்பிவி கார் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வரிச்சலுகை

வரிச்சலுகை

மேலும், இது 4 மீட்டர் எம்பிவி காராக வருவதால் வரிச்சலுகை கிடைக்கும். இந்த கார் கோ ஹேட்ச்பேக் காரின் பெரும்பாலான பாகங்களை பங்கிட்டு கொள்ளும். இதன்மூலம், போட்டியாளர்களைவிட விலையை குறைவாக நிர்ணயிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய 7 சீட்டர் எம்பிவி கார் ரூ.5 லட்சம் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் டிரைவ் கார்கள்

டெஸ்ட் டிரைவ் கார்கள்

தற்போது உற்பத்தி துவங்கப்பட்டுவிட்டாலும், உற்பத்தியாகும் டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார்கள் ஷோரூம்களில் காட்சிக்கு வைக்கவும், டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கவும் பயன்படுத்தப்படும்.

 2015 மாடல் டெலிவிரி

2015 மாடல் டெலிவிரி

வர்த்தக ரீதியில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட உள்ள கார்கள் வரும் ஜனவரி மாதம் முதல் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Nissan has commenced production of new Datsun Go+ MPV for dealer dispatch at the Renault-Nissan Oragadam facility in Chennai. 
Story first published: Saturday, October 18, 2014, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X