டட்சன் கார் உற்பத்தி இன்று துவங்கியது: மார்ச் முதல் டெலிவிரி

By Saravana

சென்னை, ஒரகடத்திலுள்ள நிசான்- ரெனோ கார் ஆலையில் டட்சன் கோ ஹேட்ச்பேக் காரின் உற்பத்தி துவங்கியது.

டட்சன் கோ கார் உற்பத்தி துவங்கப்பட்டதற்கான நிகழ்ச்சி டட்சன் பிராண்டின் சர்வதேச தலைவர் வின்சென்ட் காபீ தலைமையில் நடந்தது. இதில், அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முன்பதிவு

முன்பதிவு

டட்சன் கோ காருக்கான முன்பதிவு இந்த வாரம் துவங்க உள்ளது.

 விற்பனை

விற்பனை

அடுத்த மாதம் டட்சன் கோ காரின் விற்பனை ஆரம்பமாகிறது.

எஞ்சின்

எஞ்சின்

நிசான் மைக்ரா ஆக்டிவ் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 3 சிலிண்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

 டீசல் மாடல்

டீசல் மாடல்

1.2 லிட்டர் பெட்ரோல் மாடலில் முதலில் வருகிறது. இதைத்தொடர்ந்து, டீசல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி மாடல்களை அறிமுகம் செய்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

 இடவசதி

இடவசதி

டேஷ்போர்டிலேயே கியர் லிவர் பொருத்தப்பட்டிருப்பதால், முன்வரிசையில் கூடுதலாக ஒருவர் அமர வசதி உள்ளது.

விலை

விலை

ரூ.4 லட்சத்திற்கும் குறைவான ஆன்ரோடு விலையில் பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

மாருதி ஆல்ட்டோ கே10 போன்ற இதே ரகத்திலான என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

 அறிமுகம்?

அறிமுகம்?

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இதுதவிர, டட்சன் பிராண்டிலான எம்பிவி மற்றும் புதிய குட்டிக் காரும் பார்வைக்கு நிறுத்தப்பட உள்ளது.

 மார்க்கெட்டிங்

மார்க்கெட்டிங்

26 வயது முதல் 40 வயது வரையிலான வாடிக்கையாளர்களை குறிவைத்தும், முதல்முறையாக கார் வாங்குபவர்களை இலக்கு வைத்தும் மார்க்கெட்டிங் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(டட்சன் கோ கார் உற்பத்தி துவக்க விழா படம் கொடுக்கப்பட்டுள்ளது)

Most Read Articles
English summary
Datsun today announced the start of the production of Datsun GO hatchback in India in an event presided over by Vincent Cobee, Global Head, Datsun. The automaker's entry level vehicle will be manufactured in Renault-Nissan's facility in Oragadam,Chennai.
Story first published: Tuesday, February 4, 2014, 13:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X