டட்சன் கோ கார் ரெனோ பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படுமா? - நிசான் பதில்

டட்சன் பிராண்டு கார்கள் ரெனோ பிராண்டில் ரீபேட்ஜ் செய்து அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என்று நிசான் தெரிவித்துள்ளது.

பிரான்சை சேர்ந்த ரெனோ கார் நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த நிசான் கார் நிறுவனமும் சர்வதேச அளவில் கூட்டணி நிறுவனமாக செயல்படுகின்றன.

Datsun Go

இந்தியாவிலும் ரெனோ - நிசான் கூட்டணி நிறுவனங்களாக செயல்படுகின்றன. அதேவேளை, ஒரே ஆலையில் கார் உற்பத்தி செய்யும் இந்த நிறுவனங்கள் விற்பனையை மட்டும் தனித்தனியாக செய்து வருகின்றன.

மேலும், நிசான் நிறுவனத்தின் கார் மாடல்கள் ரெனோ பிராண்டிலும், ரெனோ கார் மாடல்கள் நிசான் பிராண்டிலும் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், நிசான் நிறுவனத்தின் பட்ஜெட் கார் பிராண்டான டட்சன் பிராண்டில் முதல் காரான கோ விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாருதி ஆல்ட்டோ காரின் மார்க்கெட்டை உடைக்குமா டட்சன் கோ!

டட்சன் பிராண்டில் புதிய கார்களும் விரைவில் வர இருக்கின்றன. டட்சன் பிராண்டு கார்களை ரெனோ நிறுவனம் தனது பிராண்டிலோ அல்லது தனது துணை பிராண்டான டேஸியா பெயரிலோ ரீபேட்ஜ் செய்து வெளியிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், டட்சன் பிராண்டு கார்களை வேறு பிராண்டில் ரீபேட்ஜ் செய்யும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று நிசான் நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜய் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார். கோல்கட்டாவில் நடந்த டட்சன் கோ கார் அறிமுக விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த தகவலை கூறினார்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X