டட்சன் கோ கார் விற்பனை எப்போது துவங்குகிறது?

By Saravana

இந்த ஆண்டில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாடல்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடல் டட்சன் கோ. குறைந்த விலையில், சிறந்த இடவசதியோடு வர இருக்கும் இந்த காருக்காக பலர் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், டட்சன் காரின் விற்பனை குறித்த யூகத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டட்சன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருக்கும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 'டெமோ' கார்கள்

'டெமோ' கார்கள்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 2 டட்சன் கோ கார்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இந்த டெமோ கார்களில் அனைத்து ஆக்சஸெரீஸ்களும் பொருத்தப்பட்டிருக்கும்.

தயாரிப்பு

தயாரிப்பு

சென்னை, ஒரகடத்தில் உள்ள நிசான்- ரெனோ கூட்டணியின் கார் ஆலையில் அடுத்த மாதம் 4ந் தேதி முதல் டட்சன் கோ காரின் உற்பத்தி துவங்குகிறது.

விலை

விலை

ரூ.3 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

மார்ச் மாதம் முதல் டட்சன் கோ கார் விற்பனைக்கு செல்ல இருப்பதாக செய்திக் குறிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 கோ ப்ளஸ்

கோ ப்ளஸ்

டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் தவிர, கோ ப்ளஸ் எம்பிவி காரும், ஐ2 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் புதிய குட்டிக் காரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்க வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
 
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X