டிசி அலங்காரத்தில் அழகு ரசம் சொட்டும் பென்ஸ் எஸ் கிளாஸ்!

By Saravana

உலகின் மிக சொகுசான கார் மாடல்களில் ஒன்று பென்ஸ் எஸ் கிளாஸ். நவீன தொழில்நுட்பங்களின் சங்கமமாகவும், உச்சப்பட்ச வசதிகளையும் தாங்கி வரும் எஸ் கிளாஸ் காருக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த காரை கஸ்டமைஸ் செய்வதற்கு உலகின் பல நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனெனில், இந்த காரில் அதிகபட்ச வசதிகள் இருப்பதும், டிசைனில் கைவைத்தால், அதன் அழகு குறையும் என்று தயங்குவதுமே காரணம்.


முதல்முறையாக...

முதல்முறையாக...

இந்தியாவில் முதல்முறையாக புதிய எஸ் கிளாஸ் காரை டிசி நிறுவனம் கஸ்டசமைஸ் செய்து அசத்தியிருக்கிறது. தனது கைவண்ணத்தில் அலங்காரம் செய்யப்பட்ட எஸ் கிளாஸ் காரின் படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் டிசி வெளியிட்டு இருக்கிறது.

 மாடல்

மாடல்

இந்தியாவில் விற்பனையில் இருந்து வரும் 2014 மாடல் பென்ஸ் எஸ் 500(டபிள்யூ222) காரை டிசி அலங்காரம் செய்து அறிமுகம் செய்துள்ளது.

 ஸ்பெஷல் வண்ணம்

ஸ்பெஷல் வண்ணம்

எலக்ட்ரிக் புளூ என்ற அடர் நீல வண்ணத்தில் புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் ஜொலிப்பதை காணலாம்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

முகப்பு கிரில்லில் மாற்றங்கள் செய்துள்ளதோடு, குரோம் வேலைப்பாடுகள் செய்து காரின் அழகை கூட்டியிருக்கின்றனர்.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் படங்களை டிசி இதுவரை வெளியிடவில்லை. ஆனால், ஏற்கனவே சொகுசான இந்த காரின் இருக்கைகள் மற்றும் டேஷ்போர்டில் சில டிசைன் மாற்றங்களை செய்து கவர்ச்சியை கூட்டியிருக்கும் என்று நம்பலாம்.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்காது என்று கூறலாம். பென்ஸ் நிறுவனம் பொருத்தி தரும் 4.7 லிட்டர் வி8 பை டர்போ எஞ்சின்தான் கஸ்டமைஸ் செய்யப்பட்ட பென்ஸ் எஸ் 500 காரிலும் இருக்கும்.

பவர்

பவர்

பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் எஞ்சின் அதிகபட்சமாக 455 எச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வழங்கும் வல்லமை கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0- 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் கடந்துவிடும் திறன் கொண்ட இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

கட்டண விபரம்

கட்டண விபரம்

பென்ஸ் எஸ் 500 காரை இதுபோன்று அலங்காரம் செய்வதற்கான கட்டண விபரத்தை டிசி கஸ்டமைஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

Most Read Articles
Story first published: Monday, June 2, 2014, 9:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X