பெங்களூரில், 3எம் கார் கேர் மையத்துக்கு ஓர் விசிட்...!!

By Saravana

காரை அழகுப்படுத்துதல் மற்றும் சிறப்பான சர்வீஸ் பணிகளை 3எம் கார் கேர் நிறுவனம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் பெங்களூர் ஜே.பி நகரில் இருக்கும் 3எம் கார் கேர் மையத்திற்கு ஓர் விசிட் அடித்தோம்.

அங்கு நடைபெறும் பணிகள் மற்றும் கட்டண விபரங்கள் போன்ற தகவல்களை பெற்று இந்த செய்தியில் பகிர்ந்துகொள்கிறோம். இது வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறோம்.


3எம் கார் கேர் மையங்கள்

3எம் கார் கேர் மையங்கள்

சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை, கொச்சி, ஆமதாபாத், குர்கான், டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் 35 கார் பராமரிப்பு மையங்களை 3எம் நிறுவனம் நடத்தி வருகிறது.

ஜேபி., நகர் கிளை

ஜேபி., நகர் கிளை

பெங்களூர், ஜே.பி நகர் மையத்திற்கு எமது டீம் விசிட் அடித்தது. இது பிரான்சிஸ் எனப்படும் 3எம் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சேவை மையம். அதன் உரிமையாளர் அசோக் உபாத்யா அங்கு நடைபெறும் பணிகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.

சேவைகள்

சேவைகள்

ஹெட்லைட் கிளினீங், வெளிப்புறத்திற்கான பாலிஷ், ஆண்டி கரோஷன் ட்ரீட்மெந்ட், கண்ணாடிகளுக்கான கூலிங் பேப்பர் ஒட்டும் பணிகள், இன்டிரியர் கிளினீங் உள்ளிட்ட பல பராமரிப்பு மற்றும் அழகூட்டும் பணிகள் செய்யப்படுகின்றன. சாதாரணமாக காரை சுத்தப்படுத்துதலைவிட கூடுதல் மெனக்கெடுகளுடன் காரை சுத்தப்படுத்துகின்றனர்.

அனைத்து பிராண்டு கார்களும்...

அனைத்து பிராண்டு கார்களும்...

இந்த சர்வீஸ் மையத்தில் அனைத்து பிராண்டு கார்களும் சுத்தப்படுத்தி தரப்படுகின்றன. மாருதி ஆல்ட்டோ, மிட்சுபிஷி லான்சர், மாருதி ஆல்ட்டோ 800, ஹூண்டாய் வெர்னா போன்ற கார்களில் கார் டீட்டெயிலிங் பணிகள் செய்யப்படுவதை படத்தில் காணலாம். ஆடி, பென்ஸ் என சொகுசு கார்களுக்கான கார் டீட்டெயிலிங் பணிகளும் மிக சிறப்பான முறையில் செய்து தருவதாக அசோக் உபாத்யா கூறினார்.

 கார் டீட்டெயிலிங்

கார் டீட்டெயிலிங்

எங்களுக்காக கார் டீட்டெயிலிங் குறித்து சிறப்பு செயல் விளக்கமும் தரப்பட்டது. அப்போது, கார் டீட்டெயிலிங் எனப்படும் பாலிஷ் செய்யப்பட்ட பகுதிக்கும், பாலிஷ் செய்யப்பபடாத பகுதிக்கும் இருக்கும் வேறுபாடுகளை காட்டினர்.

ஆதாரம்

ஆதாரம்

காரின் பானட்டில் டீட்டெயிலிங் செய்யப்பட்ட பகுதிக்கும், சாதாரண பகுதிக்கும் உள்ள வேறுபாட்டை காணலாம்.

ஹெட்லைட் கிளினீங்

ஹெட்லைட் கிளினீங்

பழைய கார்களில் ஹெட்லைட்டின் கண்ணாடியில் சிராய்ப்புகள் மற்றும் சீதோஷ்ண நிலைகளினால் இதுபோன்று மங்கலாகி விடும். இதனால், இரவில் ஹெட்லைட் ஒளி முழுவதுமாக வெளிப்படாது. புதிதாக ஹெட்லைட் மாற்றுவதற்கும் அதிக செலவு பிடிக்கும். அவ்வாறு இல்லாமல் 3எம் கார் கேர் மையத்தில் ஹெட்லைட் கிளினீங் செய்துவிட்டால் போதுமானது.

இன்டிரியர் கிளினீங்

இன்டிரியர் கிளினீங்

சில கார்கள் வெளிப்புறத்தில் பளபளத்தாலும் உட்புறத்தில் இருக்கைகள் மற்றும் டேஷ்போர்டு உளிட்டவை மோசமாக இருக்கும். இதனை மிகச்சிறப்பான முறையில் சுத்தப்படுத்தி பாலிஷ் செய்து தருகின்றனர். மியூசிக் சிஸ்டம் போன்றவை முழுவதுமாக கவர் செய்யப்பட்ட பின்னரே இன்டிரியர் கிளினீங் செய்வதால் எந்த பிரச்னையும் இரு்ககாது.

 கஸ்டமர் லான்ச்

கஸ்டமர் லான்ச்

வாடிக்கையாளர்களுக்கான ஓய்வறையும் மிக சிறப்பாக இருக்கிறது. வைஃபை வசதியுடன் கூடிய அந்த அறையில் 3எம் கார் கேர் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் அன்றாட கார் பராமரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் பாலிஷ், கண்ணாடி கிளினர்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 கார் வாஷ்

கார் வாஷ்

5 பகுதிகளாக கார் டீட்டெயிலிங் பணிகள் 3எம் கார் கேர் மையத்தில் செய்யப்பட்டது. காரின் மேல் பூசப்படும் மெழுகு பறவை எச்சங்கள், மழை மற்றும் புற ஊதாக்கதிர்களிலிருந்து கார் பெயிண்ட்டை பாதுகாக்கும் என்று தெரிவித்தனர். ஒரு முறை பாலிஷ் செய்தால் மூன்று மாதங்களுக்கு கார் மெருகு குலையாமல் இருக்கும் என்று உறுதி கூறுகின்றனர்.

இப்ப எப்டி இருக்கு?

இப்ப எப்டி இருக்கு?

கிளினிங் செய்யப்பட்ட பின்னர் ஹெட்லைட் எவ்வாறு இருக்கிறது என்பதை பாருங்கள்.

கிளினிங் செய்யப்பட்ட பின்னர் ஹெட்லைட் எவ்வாறு இருக்கிறது என்பதை பாருங்கள்.

ஏசி வென்ட் கிளினீங்

ஏசி வென்ட் கிளினீங்

ஏசி வென்ட்டுகளில் கிளினீங் செய்யப்படுவதை காணலாம். ஏசி வென்ட் துளைகளில் பூஞ்சைகள் போன்ற நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்புண்டு. அதனை ஒரு ஸ்பிரே மூலம் சுத்தம் செய்வதை காணலாம்.

பளபளக்கும் கார்

பளபளக்கும் கார்

அழது வடிந்த முகம் போன்று இருந்த ஆல்ட்டோ கார் இப்போது எப்படி மாறியிருக்கிறது என்பதை காணலாம். கட்டணம் சிறிது அதிகம் என்றாலும் கார் டீட்டெயிலிங் செய்த பின்னர் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மன நிறைவை தரும் என்பதில் சந்தேகம் இல்லை என்று அசோக் கூறினார்.

 பணி நேரம்

பணி நேரம்

பெங்களூர் ஜேபி நகரில் உள்ள 3எம் கார் கேர் மையம் காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை திறந்திருக்கும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த மையம் திறந்திருக்கும் என்று அசோக் உபாத்யா தெரிவித்தார்.

இதர சர்வீஸ் விபரம்

இதர சர்வீஸ் விபரம்

கீறல்கள் விழுவது தவிர்க்கும் பெயிண்ட் புரொடெக்ஷன் ஃபிலிம் ஒட்டுதல்(ஓர் ஆண்டு வாரண்டி)

துரு பிடிக்காமல் இருப்பதற்கான ஆன்டி கரோஷன் ட்ரீட்மென்ட்(6 மாதங்களுக்கு ஒரு முறை இலவச பராமரிப்புடன் 5 ஆண்டுகளுக்கான வாரண்டி)

புற ஊதாக்கதிர் வீச்சிலிருந்தும், காரை குளுமையாகவும் வைத்திருக்க உதவும் கதவு கண்ணாடிகளுக்கான ஃபிலிம்(3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை வாரண்டி)

விலை விபரம்

விலை விபரம்

பெயிண்ட் புரொடெக்ஷன் ஃபிலிம்- ரூ. 494/ச.அடி

நோமட் கார் மேட்டுகள்- Rs 294/ச.அடி

கண்ணாடிகளுக்கான ஃபிலிம் - ரூ.5,760/ச.அடி to ரூ.14,190/ச.அடி

பேஸிக் கிளினீங் ட்ரீட்மென்ட் - ரூ.1,090 + வரிகள்

ஆன்டி கரோஷன் ட்ரீட்மென்ட்

ரூ.2,011 (2 ஆண்டுகள் வாரண்டி)

ரூ.3,809 (5 ஆண்டுகள் வாரண்டி)

பெயிண்ட் சீலன்ட் ட்ரீட்மென்ட் - ரூ. 4,790 + வரிகள்

இன்டிரியர் அல்ட்ரா ட்ரீட்மென்ட் - ரூ.2,461

சென்னையில் கார் டீட்டெயிலிங் ஒர்க்ஸ்

சென்னையில் கார் டீட்டெயிலிங் ஒர்க்ஸ்

சென்னையில் கார் டீட்டெயிலிங்கில் சிறந்து விளங்கும் பம்பின் கார் கேர் மையத்தை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Car detailing is still in a nascent stage in the country, but is seeing an upward trend nevertheless. In comparison, car detailing in the US is a 9-billion dollar industry. But with more and more people willing to spend to keep their cars showroom-esque, 3M currently operates 35 centres currently in the country in Bangalore, Chennai, Hyderabad, Pune, Mumbai, Cochin, Ahmedabad, Gurgaon and Delhi, and plans further centres in Bangalore, Mysore and Calcutta.
Story first published: Monday, June 9, 2014, 10:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X