ஜனவரியில் உள்நாட்டு கார் விற்பனையில் பலத்த சரிவு!

By Saravana

கடந்த ஜனவரி மாதத்தில் உள்நாட்டு கார் விற்பனையில் 8 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரியில் 1,73,449 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 1,60,289 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Car Sales India

இதேபோன்று, வர்த்தக வாகனங்களின் விற்பனையில் 21 சதவீதம் சரிவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் 63,218 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 49,987 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

இந்த நிலையில், இருசக்கர வாகன விற்பனை ஆட்டோமொபைல் துறைக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த மாதம் இருசக்கர வாகனங்களின் விற்பனை 8.85 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 12,06,361 இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 13,13,796 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், மோட்டார்சைக்கிள் விற்பனை 4.04 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த மாதம் ஒட்டுமொத்த வாகன விற்பனை 3.75 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண வீக்கம், கார் கடனுக்கான வட்டி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் வாகன மார்க்கெட்டில் தொடர்ந்து மந்தமான நிலை காணப்படுகிறது.

Most Read Articles
Story first published: Tuesday, February 11, 2014, 15:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X