ஒண்ணேமுக்கா வினாடியில் ஓர் உலக சாதனை... அதிசயிக்க வைத்த எலக்ட்ரிக் கார்!

By Saravana

0 - 100கிமீ வேகத்தை மிக குறைவான வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது சுவிட்சர்லாந்து நாட்டை விஞ்ஞானிகள் உருவாக்கிய எலக்ட்ரிக் கார். ஸ்போர்ட்ஸ் கார்களை மிரள வைத்த இந்த புதிய எலக்ட்ரிக் காருக்கு க்ரிம்செல் என்று பெயரிட்டுள்ளனர்.

ஆட்டோமொபைல் ஆக்சஸெரீஸ் மீது 10 சதவீத தள்ளுபடி!

ஸூரிச் நகரில் இருக்கும் லூசெர்ன் பல்கலைகழக ஆய்வாளர்கள் குழு இந்த காரை வடிவமைத்துள்ளனர். அவர்களே இந்த காரை சமீபத்தில் சோதனை நடத்தி ஆட்டோமொபைல் பொறியாளர்களை பொறி தட்ட வைத்துள்ளனர்.


இலகு எடை

இலகு எடை

கார்பன் ஃபைபர் உதிரிபாகங்களால் உருவாக்கப்பட்ட இந்த கார் வெறும் 168 கிலோ மட்டுமே எடை கொண்டது. ஆனால், இதன் மின்மோட்டார் 200எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

சோதனை

சோதனை

சுவிட்சர்லாந்தின் துபென்டார்ஃப் விமான தள ஓடுபாதையில் வைத்து இந்த கார் சோதனை செய்யப்பட்டது. அப்போது, 0- 100 கிமீ வேகத்தை வெறும் 1.785 வினாடிகளில் எட்டியது. இதுவரை 2.134 வினாடிகளில் 0- 100 கிமீ வேகத்தை எட்டியது மிகச்சிறந்த ஆக்சிலரேஷன் சாதனையாக இருந்தது.

 குறைந்த தூரம்

குறைந்த தூரம்

வெறும் 30 மீட்டர் தூரத்திற்குள் இந்த 0 - 100 கிமீ வேகத்தை எட்டியதும் மற்றுமொரு சாதனையாக குறிப்பிடப்படுகிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த காரின் 4 சக்கரங்களின் ஹப்பிலும் எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தன.

சக்திவாய்ந்த மின்மோட்டார்கள்

சக்திவாய்ந்த மின்மோட்டார்கள்

அதிகபட்சமாக இந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் ஒன்றிணைந்து 1,630 என்எம் டார்க்கை சக்கரங்களுக்கு வழங்கும் திறன் கொண்டவை. டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் இருக்கிறது. இதற்கு முன் டெல்ஃப்ட் பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கிய காரின் சாதனையை க்ரிம்செல் முறியடுத்துள்ளது.

வீடியோ

சாதனைக்காக நடத்தப்பட்ட சோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ!

Most Read Articles
English summary
An all-electric sports car, developed by students from Switzerland has set a new record for acceleration, putting many sports cars to shame. The car accelerated to 100 km/h mark from stand still in a matter of just 1.78 seconds, smashing the previous record of 2.13 seconds.
Story first published: Monday, November 10, 2014, 13:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X