புதிய ஸ்கார்ப்பியோவில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள்: ஒரு பார்வை!

வரும் 25ந் தேதி மார்க்கெட்டுக்கு வர இருக்கும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு டீலர்ஷிப்புகளில் துவங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.20,000 முன்பணத்துடன் ஏற்கனவே மஹிந்திரா ஸ்கார்ப்பியோ வைத்திருக்கும் உரிமையார்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த முன்பதிவு நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிய ஸ்கார்ப்பியோ மாடலை முன்பதிவு செய்ய காத்திருப்பவர்களுக்காக சில முக்கிய தகவல்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

சளைக்காத பயணம்

சளைக்காத பயணம்

கடந்த 2002ம் ஆண்டு மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மார்க்கெட்டுக்கு வந்தது. தொடர்ந்து விற்பனையில் மஹிந்திராவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. இதுவரை அதிக மாற்றங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஸ்கார்ப்பியோவில் முதல்முறையாக அதிக மாற்றங்களை செய்து களமிறக்குகிறது மஹிந்திரா. டபிள்யூ105 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய ஸ்கார்ப்பியோ மாடல் குறித்த கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 வெளிப்புற மாற்றங்கள்

வெளிப்புற மாற்றங்கள்

புதிய ஹெட்லைட், முகப்பு கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி டெயில் லைட்டுகள் மூலம் மாடர்ன் தோற்றத்துக்கு மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மாறியிருக்கிறது. முன்புற, பின்புற பம்பர், பானட் மற்றும் கதவுகள் ஆகியவற்றிலும் பெரிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

 இன்டிரியர்

இன்டிரியர்

டேஷ்போர்டு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. ஏர் வென்ட்டுகள் டிசைனும் மாற்றம் கண்டுள்ளது. சென்டர் கன்சோரில் எக்ஸ்யூவி500 போன்று பெரிய அளவிலான டச்ஸ்கிரீன் திரை பொருத்தப்பட்டிருக்கும். இதில், ரியர் வியூ கேமரா, நேவிகேஷன் வசதி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை பெறலாம். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரும் மாடர்னாக இருக்கும். ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொண்ட ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டிருப்பதோடு, பவர் விண்டோஸ் சுவிட்சுகள் கதவுகளுக்கு இடம் மாறியிருக்கிறது. புதிய ட்வின் க்ளவ் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் நிகழவில்லை. தற்போதைய மாடலில் இருந்த அதே 120 பிஎச்பி பவரை அளிக்கும் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர, 75 பிஎச்பி பவரை அளிக்கும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் வழங்கப்படும். புதிய 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. தவிர்த்து 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலிலும் கிடைக்கும். இது மிகச்சிறப்பான கியர் ஷிப்ட் அனுபவத்தை தரும் என தெரிவிக்கப்படுகிறது.

சேஸீ

சேஸீ

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் முக்கிய மாற்றங்கள் ஒன்றாக சேஸீ மாற்றம் கண்டிருக்கிறது. புதிய ஸ்கார்ப்பியோவில் அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட புதிய ஹைட்ரோஃபார்ம்டு லேடர் சேஸீ பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், அதிவேகத்தில் காரின் கையாளுமை சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் எஸ்2, எஸ்4, எஸ்6, எஸ்8 மற்றும் எஸ்10 ஆகிய 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதேபோன்று, ஃபியரி பிளாக், மிஸ்ட் சில்வர், டைமன்ட் ஒயிட் போன்ற வண்ணங்களிலும், ரீகல் புளூ மற்றும் மால்டன் ரெட் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. 7, 8 மற்றும் 9 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். இதில், 9 சீட்டர் மாடலில் கடைசி வரிசை எதிரெதில் இருக்கை அமைப்பு கொண்டதாக இருக்கும்.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

பழைய மாடலைவிட ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை கூடுதலான விலையில் புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் பக்கம்

ஃபேஸ்புக் பக்கம்

எங்களது ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Country's largest utility vehicel manufacturer Mahindra to launch the new Scorpio on September 25, 2014. We list out all the details of the updated SUV for your reference.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X