டோட்டல் ஆயில் நிறுவன சி.இ.ஓ., கிறிஸ்டோப் விமான விபத்தில் மரணம்!

By Saravana

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டோட்டல் ஆயில் நிறுவனத்தின் சி.இ.ஓ., கிறிஸ்டோப் டி மார்கெரி ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் மரணமடைந்தார். அவருடன் பயணித்த மூன்று விமான ஊழியர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

கிறிஸ்டோப் மற்றும் விமான ஊழியர்கள் மூன்று பேர் ஃபால்கன்- 50 விமானத்தில் மாஸ்கோவிலிருந்து பாரிஸ் புறப்பட்டனர். விமானம் ஓடுபாதையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக குறுக்கே வந்த பனிக்கட்டிகளை அகற்றும் எந்திரத்துடன் பயங்கரமாக மோதி தீப்பிடித்தது. இதில், கிறிஸ்டோப் மற்றும் விமான ஊழியர்கள் 3 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

கடந்த 1974ம் ஆண்டு டோட்டல் குழுமத்தில் இணைந்த கிறிஸ்டோப் அந்த நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி சி.இ.ஓ., அந்தஸ்துக்கு உயர்ந்தவர். மேலும், சதாம் உசேனின் வர்த்தக கூட்டாளியாகவும் அறியப்பட்டவர். கிறிஸ்டோப் மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் பிரான்கோஸ் ஹாலந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தொழிற்துறை முன்னேற்றத்தில் கிறிஸ்டோப் முக்கிய பங்காற்றியவர் என்றும் புகழாராம் சூட்டியுள்ளார்.

ஃபார்முலா- 1 கார் பந்தயங்களில் முக்கிய ஸ்பான்சர்களில் முக்கிய நிறுவனமான டோட்டல் ஆயில் நிறுவனம் இருந்து வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் ரெட்புல் மற்றும் லோட்டஸ் ஆகிய அணிகளின் முக்கிய ஸ்பான்சராக இருந்து வருகிறது.

Total Oil Company

டோட்டல் ஆயில் நிறுவனத்தின் முக்கிய பிராண்டுகளில் ஒன்றான எல்ஃப்(Elf) ஆயில் நிறுவனமும் ஃபார்முலா-1 உள்ளிட்ட மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் அதிக அளவில் ஸ்பான்சர் செய்து வருகிறது.

Most Read Articles
English summary
The chief executive of the French oil company Total, Christophe de Margerie (6 August 1951 – 20 October 2014), died in a plane crash at the Vnukovo airport in Moscow. The swashbuckling French businessman and his three crew members were killed, when the Paris-bound Falcon 50 — a French-built, mid-sized corporate jet — collided with a snow plough and was then engulfed in flames.
Story first published: Thursday, October 23, 2014, 9:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X