லாஃபெராரியின் கன்வெர்ட்டிபிள் மாடலை அறிமுகப்படுத்தும் ஃபெராரி!

By Saravana

கடந்த ஆண்டு ஃபெராரி நிறுவனத்தின் புதிய லாஃபெராரி ஸ்போரட்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. மிக கவர்ச்சியான டிசைன் கொண்ட இந்த கார் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

மொத்தம் விற்பனை செய்யப்பட இருந்த 499 கார்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், லாஃபெராரிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து உற்சாகமடைந்துள்ள ஃபெராரி நிறுவனம் அதன் கூரை இல்லாத கன்வெர்ட்டிபிள் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


லாஃபெராரி ஸ்பைடர்

லாஃபெராரி ஸ்பைடர்

லாஃபெராரி ஸ்பைடர் என்ற பெயரில் இந்த புதிய கன்வெர்ட்டிபிள் மாடல் வருகிறது. மொத்தம் 50 கார்களை விற்பனை செய்ய ஃபெராரி திட்டமிட்டுள்ளது. 499 லாஃபெராரி கார்களில் 50 கார்கள் ஸ்பைடர் மாடலில் வெளியிட ஃபெராரி திட்டமிட்டுள்ளதாம்.

கூடுதல் விலை

கூடுதல் விலை

கூபே டிசைனிலான லாஃபெராரி காரை விட கன்வெர்ட்டிபிள் டிசைன் கொண்ட லாஃபெராரி ஸ்பைடர் இரு மடங்கு கூடுதல் விலை கொண்டதாக இருக்குமாம்.

மற்றொரு மாடல்

மற்றொரு மாடல்

லாஃபெராரியின் கன்வெர்ட்டிபிள் மாடல் தவிர்த்து, லாஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் என்ற ரேஸ் வெர்ஷனையும் ஃபெராரி அறிமுகம் செய்கிறது. இந்த லாஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் ரேஸ் காரில் 1050 எச்பி பவரை அளிக்கும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது உண்மையானால், மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரைவிட(986எச்பி) அதிக பவர் கொண்ட மாடலாக இருக்கும். மொத்தம் 30 லாஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

Photo Credit: DMC

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு லாஃபெராரி பிராண்டில் ஸ்பைடர் மற்றும் எஃப்எக்ஸ்எக்ஸ் என்ற இரு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த ஃபெராரி திட்டமிட்டிருக்கிறது.

முன்னுரிமை

முன்னுரிமை

லாஃபெராரியின் இந்த புதிய வகை லிமிடேட் எடிசன் கார்களை ஃபெராரி வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விற்பனை செய்யவும் திட்டம் இருக்கிறதாம்.

Most Read Articles
English summary
With the number of people with stratospherically high disposable income growing, makers of exocitic cars are finding it quite easy to sell their products with mind boggling price tags. As if the million dollar Laferrari was not already sufficient enough, the Italian marque is said to have decided to bring out a convertible version of the hybrid coupe, reports Automobile Magazine.
Story first published: Friday, June 20, 2014, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X