ஃபியட் டீசல் எஞ்சின் சப்ளை ஒப்பந்தத்தை நீட்டித்த மாருதி!

By Saravana

டீசல் எஞ்சின் பெறுவதற்காக ஃபியட் நிறுவனத்துடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது மாருதி கார் நிறுவனம்.

மாருதியின் பிரபல மாடல்களான ஸ்விஃப்ட், டிசையர் கார்களின் டீசல் மாடல்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் பொருத்தி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Maruti Swift

கடந்த 2011ம் ஆண்டு டீசல் கார்களுக்கு எழுந்த அபரிமிதமான வரவேற்பு காரணமாக தேவையை உடனடியாக சமாளிக்கும் விதத்தில் டீசல் எஞ்சின் சப்ளையை ஃபியட் நிறுவனத்திடமிருந்து பெற மாருதி முடிவு செய்தது.

இதற்காக, அந்த நிறுவனத்துடன் மாருதி ஒப்பந்தம் செய்தது. ஆண்டுக்கு ஒரு லட்சம் டீசல் எஞ்சின்களை பெறும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரலுடன் ஃபியட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிகிறது. இதையடுத்து, ஃபியட் டீசல் எஞ்சின் சப்ளை பெறுவதற்கான ஒப்பந்தத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

இதனால், அடுத்த சில ஆண்டுகளுக்கு மாருதி கார்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் உயிர் கொடுக்க உள்ளது. இதனிடையே, மாருதி நிறுவனத்தின் தாய் நிறுவனமான சுஸுகி மாருதிக்காக புதிய 800சிசி டீசல் எஞ்சினை தயாரித்து வருகிறது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மினி டிரக்கில் இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. மேலும், மாருதியின் புதிய ஹிட் கார் மாடலான செலிரியோவிலும் இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
India's largest manufacturer of four wheelers Maruti Suzuki currently manufactures its engines at its facility in Manesar, and assemble diesel mills at its Gurgaon facility. They will be preparing its own 800cc diesel mill in India for India.
Story first published: Saturday, July 19, 2014, 9:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X