நாவில் தேனூற வைக்கும் புதிய ஃபியட் பான்டா கிராஸ் இந்தியா வருமா?

By Saravana

ஃபியட் பான்டா எஸ்யூவியின் அடிப்படையிலான புதிய பான்டா கிராஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கிராஸ்ஓவர் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.

நகர்ப்புறம் மற்றும் ஆஃப்ரோடு என இரண்டிற்கு ஏற்ற பயன்பாட்டு அம்சங்கள் கொண்ட இந்த புதிய கிராஸ்ஓவர் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உண்மையான ஆஃப்ரோடு வாகனம் என்பதற்கு சாட்சியாக இந்த புதிய பான்டா கிராஸ் மாடலின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸின் முதல் கியர் கிராவ்லர் தொழில்நுட்பம் கொண்டதாக வந்துள்ளது. ஆஃப்ரோடு பயணங்களின்போது வாகனத்தை மெதுவாக நகர்த்துவதற்கு கிராவ்லர் நுட்பம் பயன்படும்.


வடிவமைப்பு

வடிவமைப்பு

பான்டா 4x4 மாடலின் அடிப்படையில் கூடுதலாக ஆஃப்ரோடு ஆக்சஸெரீஸ்கள் சேர்த்து வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய பான்டா கிராஸ் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பிரிமியர் ரியோ எஸ்யூவிக்கு இணையான பரிமாணங்களை கொண்டது. இந்த எஸ்யூவியில் 90 எச்பி பவரையும், 145 என்எம் டார்க்கையும் அளிக்கும் 0.9லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 80 எச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையம் அளிக்கும்.

முகப்பு

முகப்பு

அலுமினியம் ஸ்கிட் பிளேட், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், ஹெட்லைட்டுகளுக்கு அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் பனி விளக்குகள் என ஒரு சிறப்பான முக அமைப்பை கொண்டுள்ளது.

பக்கா டிசைன்

பக்கா டிசைன்

பக்கவாட்டில் பிளாஸ்டிக் கிளாடிங் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற கதவின் கீழ் கிராஸ் என்ற பேட்ஜ் பொறிக்கப்பட்ட பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. ஆஃப் ரோடு டயர்கள், புதிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் என அசத்தலாக இருக்கிறது.

 பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புறம் மிக எளிமையான டிசைன் அமைப்பை கொண்டிருக்கிறது. ஸ்கிட் பிளேட், மூன்று பிரிவுகளை கொண்ட டெயில்லைட்டுகள் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

 இன்டிரியர்

இன்டிரியர்

பழுப்பு மற்றும் கருப்பு வண்ணக் கலவையிலான டூ டோன் இன்டிரியர் அசத்துகிறது. ஸ்டீயரிங் வீல் டிசைனும் பிரத்யேக டிசைன் கொண்டதாக உளளது. ஏசி வென்ட்டுகள், மியூசிக் சிஸ்டம் மற்றும் இதர கட்டுப்பாட்டு சுவிட்சுகள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.

 இந்தியாவுக்கு எப்போது?

இந்தியாவுக்கு எப்போது?

நடப்பு ஆண்டில் புன்ட்டோ அடிப்படையிலான புதிய அவென்ட்டியூரா என்ற கிராஸ்ஓவரை ஃபியட் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, புதிய புன்ட்டோ எவோ காரும் வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பல புதிய மாடல்களை கொண்டு வந்து இறக்க ஃபியட் திட்டமிட்டுள்ளது. அதில், ஃபியட் பான்டா கிராஸ் காருக்கும் இடமிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #fiat #four wheeler #ஃபியட்
English summary
Italian automobile giant Fiat has launched its new Panda Cross, based on the Panda 4x4. Fiat is aware of the growing popularity of compact SUVs in India and could get this vehicle to India, if there is demand. Fiat will be offering two new engines a 1.3-litre MultiJet 2 and a 0.9-litre TwinAir Turbo engine.
Story first published: Monday, July 21, 2014, 14:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X