77 அஸ்டன் மார்ட்டின் ஒன்- 77 கார்களில் இதுதான் கடைசி கார்!

By Saravana

அஸ்டன் மார்ட்டின் வெளியிட்ட ஒன்- 77 கார் மாடல் மிகவும் பிரத்யேகமானது. உலகின் அழகான கார் மாடல்களில் ஒன்றாகவும் வர்ணிக்கப்படுகிறது.

மொத்தம் 77 கார்கள் தயாரிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு காரிலும், அது எத்தனையாவது கார் என்பதற்கான அடையாளமான வரிசை எண்ணும் குறிப்பிடப்பட்டு வந்தது. இந்தநிலையில், கடைசி அஸ்டன் மார்ட்டின் ஒன் - 77 கார் சமீபத்தில் இங்கிலாந்திலுள்ள பக்கிங்ஹாம்ஷயயர் பகுதியில் உள்ள அஸ்டன் மார்ட்டின் டீலர்ஷிப்பில் தரிசனம் கொடுத்தது.


தயாரிப்பு

தயாரிப்பு

கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுகளுக்கு இடையில் அஸ்டன் மார்ட்டின் ஒன் - 77 கார்கள் தயாரிக்கப்பட்டன. படத்தில் காணும் கார் 2012ம் ஆண்டு முற்பாதியில் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வண்ணம்

வண்ணம்

வெள்ளை வண்ணம் கொண்ட இந்த கார் வாடிக்கையாளரின் விருப்பத்தின்பேரில் சிவப்பு வண்ண இன்டிரியர் கொண்டதாக கஸ்டமைஸ் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேசியக் கொடி

தேசியக் கொடி

இங்கிலாந்து நாட்டின் தேசியக் கொடி காரின் ஜன்னலில் ஒட்டபப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

அழகில் மட்டுமல்ல, அசுரத்தனமான செயல்திறனையும் வெளிப்படுத்தும் இந்த காரில் 750 எச்பி பவரை அளிக்கும் 7.3 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

செயல்வேகம்

செயல்வேகம்

0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 354கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

 விலை

விலை

இந்தியாவில் இந்த கார் ரூ.20 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Most Read Articles
English summary
The Aston Martin One-77 was assembled in 77 units and the last one was the subject of a small photo shoot recently.
Story first published: Friday, October 31, 2014, 14:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X