ஃபோர்டு கிளாசிக் காரின் விலை மீண்டும் அதிரடியாக குறைப்பு!
By Saravana
ஃபோர்டு கிளாசிக் செடான் காரின் விலையை மீண்டும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது காம்பெக்ட் செடான் கார்களுக்கு இணையாக ரூ.4.88 லட்சத்தில் ஆரம்ப விலையில் இப்போது ஃபோர்டு கிளாசிக் கார் விற்பனைக்கு கிடைக்கிறது. பார்த்து சலித்துவிட்ட டிசைனாக இருந்தாலும், கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க மாடலாக விளங்குகிறது.
அடுத்த ஆண்டு புதிய காம்பெக்ட் செடான் காரை விற்பனைக்கு கொண்டு வரும் வரை இந்த காரை மார்க்கெட்டில் தொடர்ந்து விற்பனை செய்யவும் ஃபோர்டு முடிவு செய்துள்ளது. இதனால், இந்த காருக்கு அதிக சலுகைகளையும், விலை குறைப்பு சலுகையையும் ஃபோர்டு அவ்வப்போது அறிவித்து வருகிறது.
தேர்வுக்கான விஷயங்கள்
தேர்வுக்கான விஷயங்கள்
டிசைனை தவிர்த்து இந்த காரை தேர்வு செய்வதற்கான சிறப்பம்சங்கள் சிலவற்றையும், விலை விபரத்தையும் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.
சிறந்த பெர்ஃபார்மென்ஸ்
சிறந்த பெர்ஃபார்மென்ஸ்
சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட மாடல் இது. 0- 100 கிமீ வேகத்தை 11.43 வினாடிகளில் எட்டிவிடும் ஆற்றல் கொண்ட எஞ்சினுடன் கிடைக்கிறது. என்ட்ரி லெவல் செடான் கார் செக்மென்ட்டில் 0- 100 கிமீ வேகத்தை குறைவான வேகத்தில் எட்டும் திறன் கொண்ட மாடலாகவும் இதனை குறிப்பிடலாம்.
எஞ்சின்
எஞ்சின்
கிளாசிக் செடான் காரில் 101 எச்பி ஆற்றலையும், 146 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.6 லிட்டர் டியூராடெக் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 68 எச்பி பவரையும், 160 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் டியூராடார்க் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது. ஆட்டோமேட்டிக் மாடல் இல்லை.
மைலேஜ்
மைலேஜ்
அராய் சான்றுபடி, பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.09 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் 19.68 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசதிகள்
வசதிகள்
இந்த காரில் சென்ட்ரல் லாக்கிங், டியூவல் ரியர் பனிவிளக்குகள், குளிர்சாதன வசதி, பவர் விண்டோஸ், டில்ட் வசதி கொண்ட பவர் ஸ்டீயரிங், எலக்ட்ரிக் பூட் ரிலீஸ் போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது.
விலை விபரம்
விலை விபரம்
ஃபோர்டு கிளாசிக் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
பெட்ரோல்
கிளாசிக் 1.6 எல்எக்ஸ்ஐ - ரூ.4,88,016
கிளாசிக் 1.6 சிஎல்எக்ஸ்ஐ - ரூ. 5,56,827
கிளாசிக் 1.6 டைட்டானியம் - ரூ. 6,34,913
டீசல்
கிளாசிக் 1.4 எல்எக்ஸ்ஐ - ரூ.6,18,917
கிளாசிக் 1.4 சிஎல்எக்ஸ்ஐ - ரூ. 6,65,298
கிளாசிக் 1.4 டைட்டானியம் - ரூ.7,34,944
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ!
Post by DriveSpark Tamil.
More from DriveSpark
Article Published On: Thursday, May 8, 2014, 14:40 [IST]
English summary
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+