அப்படியா... முற்றிலும் மாறுபட்ட டிசைனில் வரும் ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்!

By Saravana

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 11 மாதங்களில் விற்பனையில் பல புதிய சாதனைகளை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவி படைத்துள்ளது. டிசைன், வசதிகள், எஞ்சின் ஆப்ஷன்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துவிட்டது. முன்பதிவு எகிடுதகிடாக அதிகரித்ததால், மிக அதிகமாக இருந்த நிலையில், சென்னை ஆலையில் ஈக்கோஸ்போர்ட் உற்பத்தியை ஃபோர்டு அதிகரித்துள்ளது.

இதையடுத்து, ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவிக்கான முன்பதிவு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உற்பத்தியாகும் 5 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளில் ஒன்று வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட் டிசைனில் பல புதிய மாற்றங்களை செய்து ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வர இருக்கிறது.


டிசைன் மாற்றம்

டிசைன் மாற்றம்

வழக்கமாக ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் முன்பக்க கிரில், பம்பர் போன்ற டிசைன்களில் மட்டும் மாற்றங்கள் செய்யப்படும். ஆனால், ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஒட்டுமொத்த டிசைனிலும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், ஈக்கோஸ்போர்ட்டின் தோற்றம் மிக கம்பீரமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

தற்போது எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டாப் வேரியண்ட்டில் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கும். மேலும், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் ஆப்ஷனலாக வழங்கப்படும் என்று தெரிகிறது. அளவில் பெரிய வீல்கள், புதிய சஸ்பென்ஷன் அமைப்பு போன்றவையும் இடம்பெறும். அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் எந்த மாற்றங்களும் இருக்காது. தற்போது விற்பனையில் இருக்கும் மூன்று எஞ்சின் ஆப்ஷன்கள் தொடரும்.

அறிமுகம்

அறிமுகம்

2016ம் ஆண்டு துவக்கத்தில் அல்லது மிஞ்சும் பட்சத்தில் இரண்டாவது காலாண்டிற்குள் இந்த புதிய ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உற்பத்தி அதிகரிப்பு

உற்பத்தி அதிகரிப்பு

ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படுவதோடு, சென்னை ஆலையின் உற்பத்தி திறனை வெகுவாக அதிகரிக்கவும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. சென்னை ஆலையில் ஆண்டுக்கு 55,000 முதல் 70,000 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஈக்கோஸ்போர்ட்டுக்கு காத்திருப்பு காலம் அதிகமிருப்பதற்கு ஏற்றுமதியும் முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.

Most Read Articles
English summary
Ford will launch a facelifted EcoSport in 2016. Officially dubbed as “mid cycle action” or MCA by Ford, the refresh will take customer feedback into consideration while adding features to the crossover.
Story first published: Thursday, May 15, 2014, 11:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X