குட் நியூஸ்... ஈக்கோஸ்போர்ட்டுக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்!
ஈக்கோஸ்போர்ட்டுக்காக பல மாதங்களாக தவம் கிடந்த வாடிக்கையாளர்களுக்கு இன்று ஓர் நல்ல செய்தி வெளியாகியுள்ளது. ஆம், ஈக்கோஸ்போர்ட்டுக்கான முன்பதிவு மீண்டும் துவங்கப்படுவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.
அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் முன்பதிவு துவங்கப்படுவதாகவும் ஃபோர்டு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 50,000 ஈக்கோஸ்போர்ட்டுகளை டெலிவிரி கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

"ஈக்கோஸ்போர்ட்டின் காத்திருப்பு காலத்தை வெகுவாக சுருக்கியிருப்பதாகவும், ஈக்கோஸ்போர்ட்டை வாங்குவதற்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக முன்பதிவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது", என்று ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறை உயர் அதிகாரி வினய் பிபர்சானியா தெரிவித்துள்ளார்.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்காக பல மாதங்களாக தவம் கிடந்த வாடிக்கையாளர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியை ஃபோர்டு இன்று அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








