வைஃபை வசதியுடன் ஃபோர்டு ஃபிகோ கார் அறிமுகம்!

ஃபோர்டு ஃபிகோ காரில் வைஃபை சாதனம் மூலம் இன்டர்நெட் இணைப்பு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி மட்டுமல்லாது சில கூடுதல் வசதிகளுடன் ஃபிகோ கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

 வைஃபை கருவி

வைஃபை கருவி

ஆலையிலிருந்து வெளிவரும்போதே ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டு வரும் ஃபிகோ கார்களின் EXi, ZXi மற்றும் Titanium வேரியண்ட்டுகளில் வைஃபை வசதி தரும் கருவியுடன் கிடைக்கும்.

சிம்கார்டு

சிம்கார்டு

ஆடியோ சிஸ்டத்தில் புதிய வைஃபை கருவியும் சேர்க்கப்பட உள்ளது. இது காருக்குள் வைஃபை வசதியை வழங்கும். இதற்கு 2ஜி அல்லது 3ஜி மொபைல்போன் சிம்கார்டு ஒன்று தேவைப்படும்.

விலை

விலை

வைஃபை வசதிக்காக ரூ.10,000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர கூடுதல் அம்சங்கள்

இதர கூடுதல் அம்சங்கள்

மேலும், EXi வேரியண்ட்டில் ஸ்டீரியோ சிஸ்டம் நிரந்தர ஆக்சஸெரீயாகவும், ZXi வேரியண்ட்டில் டிரைவர் ஏர்பேக் மற்றும் எலக்ட்ரிக் ரியர் வியூ மிரர்கள் நிரந்தர ஆக்சஸெரீஸ்களாகவும் கொடுக்கப்பட உள்ளது.

 விலை கூடியது

விலை கூடியது

கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் கொடுக்கப்படுவதன் காரணமாக LXi வேரியண்ட்டை தவிர்த்து மற்ற வேரியண்ட்டுகளின் விலை உயர்ந்துள்ளது. EXi வேரியண்ட் விலை ரூ.10,000 வரையிலும், ZXi வேரியண்ட் விலை ரூ.20,000 வரையிலும், டைட்டானியம் வேரியண்ட் விலை ரூ.10,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ford #figo #four wheeler #ஃபிகோ
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X