முழங்கால்களை பாதுகாக்கும் புதிய ஏர்பேக்: ஃபோர்டு அறிமுகம்

By Saravana

முழங்கால்களை பாதுகாக்கும் கார்களுக்கான புதிய ஏர்பேக்கை ஃபோர்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. 2015 மாடல் ஃபோர்டு மஸ்டாங் காரில் இந்த புதிய ஏர்பேக் அறிமுகம் செய்யப்படுகிறது.

விபத்தின்போது முன் இருக்கை பயணியின் முழங்கால்களை பாதுகாக்கும் வகையில் இந்த ஏர்பேக் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கிளவ் பாக்ஸின் மூடியின் இடையில் பொருத்தப்பட்டிருக்கும். முழங்கால்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் இதுவரை உருவாக்கப்பட்ட ஏர்பேக்குகளைவிட இது இலகுவானதாகவும், எளிய அமைப்பையும் கொண்டிருக்கும்.

சாதாரண முழங்கால்களுக்கான ஏர்பேக்குகள் டேஷ்போர்டின் கீழ்பகுதியிலிருந்து பலூன் போன்று விரிவடையும். ஆனால், ஃபோர்டு வடிவமைத்திருக்கும் புதிய ஏர்பேக் கிளவ் பாக்ஸ் மூடிக்கு இடையில் பொருத்தப்பட்டிருக்கிறது. அதாவது, மூடி இரு பேனல்கள் கொண்டதாகவும், நடுவில் ஏர்பேக்கும் இருக்கும்.

விபத்து ஏற்பட்டால் மூடியின் நடுவில் பொருத்தபப்பட்டிருக்கும் ஏர்பேக் விரிவடைந்து மோதல் தாக்கத்தை உறிஞ்சிக் கொள்வதோடு, கிளவ் பாக்ஸின் வெளிப்புற மூடியை முழங்கால்களுக்கு நேராக தள்ளி கால்களை கவசம் போல் பாதுகாக்க செய்யும்.

இது பயணிகளின் பாதுகாப்புக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதாரண ஏர்பேக்குகளைவிட 65 சதவீதம் இலகு எடை கொண்டது என்பதோடு, சிறிய இடத்திலேயே அமைத்துவிடலாம்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/o4QcF350pjU" frameborder="0" allowfullscreen></iframe></center>

Most Read Articles
மேலும்... #ford #video #four wheeler
English summary
The 2015 Ford Mustang will see an industry first - a passenger side glovebox-mounted airbag. This airbag will drastically reduce knee injuries in the event of a crash, if it is found to be effective.&#13;
Story first published: Thursday, July 10, 2014, 15:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X