ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் சிறப்பம்சங்கள், வசதிகள்!

By Saravana

இந்த மாதத்திலேயே ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிட்சைஸ் மார்க்கெட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஃபோர்டு ஃபியஸ்ட்டா விற்பனையிலும் நிச்சயம் உயர்வு பெறும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த நிலையில், மிட்சைஸ் செடான் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய வசதிகள், வேரியண்ட்டுகள் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


 டீசலில் மட்டும்

டீசலில் மட்டும்

ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் டீசல் எஞ்சின் கொண்டதாக களமிறக்கப்பட உள்ளது. இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 90 பிஎச்பி பவரையும், 204 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும்.

ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் பெரும் வெற்றியயை பதிவு செய்திருக்கும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட மாடல் சர்வதேச அளவில் பல மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, சிறிது காலம் கழித்து ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

வேரியண்ட்டுகள் விபரம்

வேரியண்ட்டுகள் விபரம்

ஆம்பியன்ட், டிரென்ட் மற்றும் டைட்டானியம் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் மட்டுமே ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு கிடைக்கும். வேரியண்ட் வாரியாக இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ஆம்பியன்ட் வேரியண்ட் வசதிகள்

ஆம்பியன்ட் வேரியண்ட் வசதிகள்

காரை நிறுத்தியவுடன் சிறிது நேரம் ஒளிர்ந்து வெளிச்சம் தரும் கெய்டு மீ ஹோம் ஹெட்லைட்டுகள், அட்ஜெஸ்ட் வசதியுடன் டிரைவர் இருக்கை, மடக்கிக் கொள்ளும் வசதியுடன் பின் இருக்கை, ரிமோட் லாக், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள், இபிடி., நுட்பத்துடன் இணைந்து செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிக் சிஸ்டம், டிரைவர் பக்க ஏர்பேக் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

டிரென்ட் வேரியண்ட் வசதிகள்

டிரென்ட் வேரியண்ட் வசதிகள்

ஆம்பியன்ட் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன் சேர்த்து கூடுதலாக பாடி கலரில் கதவுக் கைப்பிடிகள், பனி விளக்குகள், லெதர் உறை போடப்பட்ட ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வீல் கவர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், சிடி, யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட் வசதிகள் மற்றும் 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், முன் பக்க பயணி மற்றும் டிரைவருக்குமான டியூவல் ஏர்பேக் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.

டைட்டானியம் வேரியண்ட் வசதிகள்

டைட்டானியம் வேரியண்ட் வசதிகள்

ஆம்பியன்ட், டிரென்ட் வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன் சேர்த்து கூடுதலாக அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள், கீ லெஸ் என்ட்ரி, டிஜிட்டல் டிரிப் மீட்டர்், அவசர காலத்துக்கான ஃபோர்டு சிங்க் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

 இது முக்கியம்

இது முக்கியம்

கடந்த 2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட குளோபல் ஃபியஸ்ட்டா மாடல் இந்தியாவில் எடுபடவில்லை. சிறந்த காராக இருந்தும் விலை அதிகம் என்ற ஒற்றை வார்த்தையில் மார்க்கெட்டை இழந்தது. இந்த நிலையில், ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலையை மிக கவனமாக ஃபோர்டு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
As reported earlier Ford is expected to launch only the diesel variant first. The 2014 Fiesta will be made available in a petrol trim later this year end. There is no reason in particular why Ford is launching the diesel before the petrol, perhaps they believe the diesel will be the most preferable buyers choice. 
Story first published: Wednesday, June 18, 2014, 10:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X