இந்த ஆண்டு இறுதியிலேயே ரிலீசாகிறது ஃபோர்டு ஃபிகோ?!

By Saravana

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் புதிய ஃபிகோ காரை அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு சில ஃபிகோ கார்களை சோதனை செய்வதற்காக ஃபோர்டு இறக்குமதி செய்துள்ளது.

கா கான்செப்ட்டாக அறிமுகமான இந்த புதிய ஃபிகோ கார்கள் விரைவில் இந்திய சாலைகளில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதனைத்தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதியில் புதிய ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டிசைன்

டிசைன்

கவர்ச்சியான டிசைன் கொண்ட ஹேட்ச்பேக் கார்களில் ஃபோர்டு ஃபிகோவும் ஒன்று. பல இந்திய வாடிக்கையாளர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆனால், புதிய ஃபோர்டு ஃபிகோ டிசைனில் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

தற்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் ஃபிகோ ஹேட்ச்பேக் கார்களில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டிஐ- விசிடி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதே எஞ்சின் ஃபோர்டு ஃபியஸ்ட்டா மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல்களில் பொருத்தப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

 ஈக்கோஸ்போர்ட் எஞ்சின்

ஈக்கோஸ்போர்ட் எஞ்சின்

ஈக்கோஸ்போர்ட்டில் டர்போசார்ஜ்டு 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், புதிய ஃபிகோ ஹேட்ச்பேக் காரில் டர்போசார்ஜர் இல்லாத 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் என்று கூறப்படுகிறது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

புதிய ஃபிகோ காரில் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஈக்கோஸ்போர்ட் போன்றே மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் புதிய ஃபிகோ கார் கிடைக்கும்.

 செக்மென்ட்

செக்மென்ட்

தற்போதைய ஃபிகோ கார் விற்பனை செய்யப்படும் அதே பி ப்ளஸ்(B+) செக்மென்ட்டில் புதிய காரும் நிலைநிறுத்தப்படும். ஆனால், விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

விற்பனைக்கு...

விற்பனைக்கு...

புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ முதலில் பிரேசில் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதனைத்தொடர்ந்து, இந்திய மார்க்கெட்டிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. திட்டமிட்டபடி சோதனைகள் நிறைவு செய்யப்பட்டால் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு விடும். இல்லாவிடில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

புதிய ஃபிகோ கான்செப்ட்

புதிய ஃபிகோ கான்செப்ட்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபிகோ கான்செப்ட் என்ற புதிய காம்பெக்ட் செடான் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. புதிய ஃபிகோவில் இடம்பெறும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் வசதிகளுடன் இந்த கார் வர இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் கிளாசிக் செடான் காருக்கு மாற்றாக அந்த புதிய கார் நிலைநிறுத்தப்படும்.

Most Read Articles
மேலும்... #ford #figo #four wheeler #ஃபிகோ
English summary
Now we have confirmation that there will be two new vehicles sharing the Figo name. The first will be the new 2014 Figo hatchback, while a compact sedan of the Figo will also be available.
Story first published: Wednesday, May 21, 2014, 11:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X