கிளாசிக் செடான் விலையை ஒரு லட்சம் குறைக்கும் ஃபோர்டு!!

By Saravana

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் ஆகிய காம்பெக்ட் செடான் கார்களுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் ஆதரவு தருவதற்கு அந்த கார்களின் சவாலான விலையும் காரணம்.

இந்த நிலையில், லீனியா காரை குறைந்த விலையில் சமீபத்தில் விற்பனைக்கு விட்டது ஃபியட். இதைத்தொடர்ந்து, அனைத்து நிறுவனங்களும் இதே பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளன. தற்போது ஃபோர்டு நிறுவனம் என்ட்ரி லெவல் செடான் ரகத்தில் விற்பனை செய்யும் கிளாசிக் செடான் காரின் விலையை அதிரடியாக குறைக்க திட்டமிட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

ஃபோர்டு கிளாசிக் செடான் காரின் விலை விரைவில் ஒரு லட்ச ரூபாய் வரை குறைக்கப்படுகிறது. இந்த மாத இறுதியிலிருந்து இந்த விலை குறைக்கப்பட்ட கிளாசிக் கார் விற்பனைக்கு வருகிறது.

எவ்வளவு குறையும்?

எவ்வளவு குறையும்?

பேஸ் மாடலின் விலை ரூ.70,000 வரையிலும், டாப் எண்ட் மாடலின் விலை ஒரு லட்ச ரூபாய் வரையிலும் குறைக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

பேஸ் மாடலின் விலை ரூ.4.99 லட்சம் முதலும், டாப் எண்ட் டீசல் மாடல் விலை ரூ.7.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இது மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.

 வசதிகளும் குறைக்கப்படுமா?

வசதிகளும் குறைக்கப்படுமா?

விலை குறைக்கப்பட்ட ஃபோர்டு கிளாசிக் காரில் வசதிகளும் குறைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஃபியஸ்ட்டா

ஃபியஸ்ட்டா

கிளாசிக் காரைத் தொடர்ந்து ஃபியஸ்ட்டா விலையையும் கணிசமாக குறைக்க ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஹோண்டா சிட்டி மிக சவாலான விலையில் வந்துள்ளதையடுத்து, ஃபியஸ்ட்டாவின் விலையை மறு நிர்ணயம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஃபோர்டு கிளாசிக்

ஃபோர்டு கிளாசிக்

ஃபோர்டு கிளாசிக் காரின் கூடுதல் விபரங்கள் அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காணலாம்.

Most Read Articles
 
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X