உலக சுற்றுச்சூழல் தினம்: இன்று கார்களுக்கு புகை பரிசோதனை முகாம்களுக்கு ஏற்பாடு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இன்று பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பு புகை பரிசோதனை முகாம்களை நடத்த உள்ளன.

மஹிந்திரா, ஃபோர்டு இந்தியா, ஃபியட், ஸ்கோடா ஆட்டோ உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்கள் தங்கள் டீலர்ஷிப்புகள் வழியாக இலவச புகை பரிசோதனை முகாம்களை நடத்துவதாக தெரிவித்துள்ளன. இதேபோன்று, வாகன தயாரிப்பாளர் கூட்டமைப்பான சியாம் அமைப்பு மும்பை மற்றும் பெங்களூரில் இலவச சிறப்பு புகை பரிசோதனை முகாம்களை அறிவித்துள்ளது.

PUC Check Up Camp

மேலும், வாகன பரிசோதனை செய்த பின் இலவசமாக புகை பரிசோதனை சான்றிதழ்களையும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதவிர, குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான வழிகாட்டு முறைகள் குறித்த நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சியாம் சார்பில் நாளை நடத்தப்படும் வாகன புகை பரிசோதனை முகாம்கள் நடைபெறும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெங்களூர் முகவரி

9/8, ஓசூர் டிவிஷன்,
நம்பர்.63, டெய்ரி சர்க்கிள்,
கிறிஸ்ட் கல்லூரி எதிரில்,
பெங்களூர்.
காலை 10.30 மணிமுதல்

மும்பை முகவரி

டாடா மோட்டார்ஸ்,
மஸ்தா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
ஓர்லி நகா, மும்பை-18
காலை: 11.30 மணிமுதல் மதியம் 1 மணி வரை

Most Read Articles
English summary
On account of tomorrow being World Environment Day, the Society of Indian Automobile Manufacturers (SIAM) will be conducting a free PUC check up camp in Mumbai and Bangalore.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X