இந்தியாவிலிருந்து கார் ஏற்றுமதியை துவங்கிய ஜெனரல் மோட்டார்ஸ்

By Saravana

இந்தியாவிலிருந்து முதல்முறையாக செவர்லே கார் ஏற்றுமதியை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது.

மும்பை துறைமுகத்திலிருந்து சிலி நாட்டுக்கு இடதுபக்க டிரைவிங் கொண்ட 140 செவர்லே பீட் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மாதாமாதம் சிலி நாட்டுக்கு செவர்லே பீட் கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் அர்விந்த் சக்சேனா கூறியுள்ளார்.

Chevy Beat

மஹாராஷ்டிர மாநிலம், தலேகான் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பீட் கார்களை பல்வேறு வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 10ந் தேதி ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ., மேரி பரா இந்தியாவிற்கு வருகை தந்த போது தலேகான் ஆலையில் இந்த ஏற்றுமதிக்கான இடதுபக்க டிரைவிங் கொண்ட பீட் காரின் உற்பத்தி துவங்கப்பட்டது. தலேகான் ஆலையில் ஆண்டுக்கு 1.70 லட்சம் கார்களையும், 1.60 லட்சம் எஞ்சின்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

Most Read Articles
English summary

 General Motors India has commenced car exports to Chile. The first 140 left-hand-drive Chevrolet Beats were shipped from the Mumbai Port Trust of Maharashtra on Sept. 25.
Story first published: Tuesday, September 30, 2014, 11:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X