குஜராத்தில் பொது போக்குவரத்தில் எலக்ட்ரிக் பஸ்கள்: முன்னோடி திட்டம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாக குஜராத் மாநில பொது போக்குவரத்தில் எலக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

குஜராத் மின்சார வாரியத்தின் அங்கமாக செயல்படும் குஜராஜ் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் பஸ்களை சோதனை முறையில் அறிமுகம் செய்கிறது. அகமதாபாத் மற்றும் காந்திநகருக்கு இடையிலான இந்த புதிய எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Electric Bus

முதல்கட்டமாக 15 முதல் 20 எலக்ட்ரிக் பஸ்களை 35 கிமீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பஸ்கள் 15 முதல் 40 பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக இருக்கும்.

இதற்காக அகமதாபாத் மற்றும் காந்திநகர் இடையிலான சாலையில் சூரிய மின்சக்தியில் இயங்கும் சார்ஜ் செய்யும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடியின் கனவு திட்டமாக இது குறிப்பிடப்படுகிறது.

இந்த திட்டம் வெற்றி பெற்றால் மாநிலம் முழுவதும் எலக்ட்ரிக் பஸ்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குஜராஜ் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை தனியாருடன் இணைந்து விரிவுப்படுத்தவும் குஜராத் பவர் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

இந்த பஸ்கள் சூரிய மின்சக்தி சார்ஜ் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை பெறும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். தவிர, டீசல் நுகர்வும் வெகுவாக குறையும்.

Most Read Articles
English summary
Gujarat will be introducing electric buses all through the state. They will first introduce its electric buses on the Gandhinagar to Ahmedabad route. Gujarat Power Corporation Limited will be introducing electric buses as a pilot project. The initial phase of this project will include roughly 15 to 20 electric buses. It is part of former Chief Minister of Gujarat Narendra Modi's plan for a cleaner and greener state
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X