இந்தியாவில் புதிய ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட் மாடல் அறிமுகம்

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்திய பிரவேசம் செய்துள்ளது ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட். விற்பனையில் சொதப்பி வந்த அக்கார்டு காருக்கு கடந்த ஆண்டு இறுதியில் விடை கொடுத்தது ஹோண்டா.

இந்த நிலையில், அக்கார்டு ஹைபிரிட் மாடைல இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. ஹோண்டா. பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இயங்கும் இந்த ஹைபிரிட் கார் கூடுதல் மைலேஜை தரும்.

இந்த காரில் 141 பிஎஸ் பவரையும், 165 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மற்றும் மின் மோட்டார் இணைந்து இயங்கும்போது அதிக பட்சமாக 196 பிஎச்பி பவரையும் 306 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

Honda Accord Hybrid model

இந்தியாவிலேயே அக்கார்டு ஹைபிரிட் காரை அசெம்பிள் செய்வதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், காரின் விலையை ஓரளவுக்கு குறைத்து நிர்ணயிக்க முடியும். மேலும், இதுவரை விற்பனையில் இருந்து வந்த பெட்ரோல் மாடலைவிட புதிதாக வரும் அக்கார்டு ஹைபிரிட் கார் ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.

ரூ.30 லட்சம் முதல் ரூ.33 லட்சம் வரையிலான விலையில் புதிய ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
At the recent 2014 Auto Expo Honda unveiled the new Accord Hybrid, yes you heard it right. This is not the first Hybrid car by the Japanese manufacturer, previously Civic too had an option. However, the car failed as it was not well understood by the market then.
Story first published: Thursday, February 13, 2014, 17:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X