டபுள் ஷிஃப்டில் ஹோண்டா சிட்டி உற்பத்தி: காத்திருப்பு காலம் குறையும்

By Saravana

ராஜஸ்தான் ஆலையில், ஹோண்டா சிட்டி கார் இரண்டு ஷிப்டுகளில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதனால், அந்த காரின் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொபிலியோ கார் உற்பத்திக்காக டெல்லி அருகே உள்ள குர்கான் ஆலையிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தபுகெரா ஆலைக்கு சிட்டி காரின் உற்பத்தியை ஹோண்டா மாற்றியது.

ஹோண்டா சிட்டி

இதனால், இரு மாதங்களாக ஹோண்டா சிட்டி காரின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியால் சிட்டி காருக்கான காத்திருக்கு காலம் 4 மாதங்கள் வரை வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், மாருதி சியாஸ் காரின் வருகையும் ஹோண்டா சிட்டிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டா சிட்டி காத்திருப்பு காலத்தை மனதில் வைத்து பலர் மாருதி சியாஸ் காரை முன்பதிவு செய்ய முடிவு செய்யத் துவங்கினர்.

இதனால், நெருக்கடிக்கு உள்ளான ஹோண்டா கார் நிறுவனம், சிட்டி காரின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் உள்ள ஆலையில் இரண்டு ஷிப்ட்டுகளில் சிட்டி காரை உற்பத்தி செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.

மாதத்திற்கு 5,000 கார்கள் என்ற உற்பத்தியை இலக்கை 10,000 என்ற அளவில் ஹோண்டா அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஹோண்டா சிட்டி காரின் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda has now decided to double its production output of City from its facility in Tapukara, Rajasthan. Every month the Japanese manufacturer was assembling 5,000 vehicles, however, they will now be producing 10,000 vehicles in a single month.
Story first published: Monday, November 10, 2014, 12:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X