செல்ஃப் டிரைவிங் கார்... ஹோண்டாவும் கோதாவில் குதித்தது

By Saravana

கூகுள், டொயோட்டா, நிசான் உள்ளிட்ட நிறுவனங்களின் வரிசையில் ஹோண்டா கார் நிறுவனமும் புதிய செல்ஃப் டிரைவிங் புரோட்டோடைப் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் வைத்து இந்த கார் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. விபத்தில்லா பயணம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார் மாடல்

கார் மாடல்

அக்குரா ஆர்எல்எக்ஸ் சொகுசு செடான் காரில் ஜிபிஎஸ், சென்சார்கள், 360 டிகிரி கேமராக்களை பொருத்தி கார் சோதனை செய்யப்பட்டது.

பயணிகள்

பயணிகள்

காரில் இரண்டு பொறியாளர்கள் காரின் இயக்கத்தை கண்காணித்தனர்.

 வெற்றிகரமாக சோதனை

வெற்றிகரமாக சோதனை

ஜிபிஎஸ் மூலம் அந்த நெடுஞ்சாலையின் வேகக்கட்டுப்பாட்டு அளவை துல்லியமாக கணித்து கார் சென்றதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடம் மாறும்போது எச்சரிக்கை செய்து சிறப்பாக சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கு

இலக்கு

வரும் 2020ம் ஆண்டில் தனது கார் மாடல்களில் இந்த புதிய தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Honda shared its vision of the hands-free highway commute Tuesday, a car that can safely drive itself on the freeway while the driver’s hands are off the wheel. While the car is just a prototype, Honda says the technology could start appearing on Honda cars in 2020 and beyond.
Story first published: Tuesday, September 16, 2014, 15:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X