எர்டிகாவை பின்னுக்குத் தள்ளிய ஹோண்டா மொபிலியோ!

By Saravana

விற்பனைக்கு வந்த முதல் மாதத்திலேயே மாருதி எர்டிகாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது ஹோண்டா மொபிலியோ. ஹோண்டா அறிமுகம் செய்து வரும் புதிய மாடல்கள் அனைத்தும் தம்தம் செக்மென்ட்டுகளில் முன்னிலை பெற்று வருகின்றன.

ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் தனது நேர் எதிரியான ஹூண்டாய் வெர்னா காரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகித்து வருகிறது. இதேபோன்று, கடந்த ஜூலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹோண்டா மொபிலியோ காரும் முதல் மாதத்திலேயே தனது போட்டியாளரான மாருதி எர்டிகாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.


 விற்பனை எண்ணிக்கை

விற்பனை எண்ணிக்கை

கடந்த மாதம் 5,491 எர்டிகா கார்கள் விற்பனையாகியுள்ள நிலையில், ஹோண்டா கார் நிறுவனம் 5,530 மொபிலியோ கார்களை விற்பனை செய்துள்ளது. இது மாருதி நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியையும், நெருக்கடியையும் தந்துள்ளது.

டீசல் மாடல்

டீசல் மாடல்

புதிய 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வந்த ஹோண்டா நிறுவனத்தின் புதிய அமேஸ், சிட்டி மற்றும் மொபிலியோ கார்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த ஒரு எஞ்சினை வைத்து இந்திய மார்க்கெட்டில் மூன்றாவது இடத்தை ஹோண்டா பிடித்துவிட்டது. டீசல் மாடல் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் என்பதும் மொபிலியோவை வாடிக்கையாளர்கள் மொய்த்து வருவதற்கான காரணமாகவும் இருக்கிறது.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

மாருதி எர்டிகாவைவிட ஹோண்டா மொபிலியோ காரின் பெட்ரோல் பேஸ் மாடல் விலை ரூ.55,000 வரை கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 முன்பதிவு

முன்பதிவு

இதுவரை ஹோண்டா மொபிலியோ காருக்கான முன்பதிவு 20,000ஐ நெருங்கியுள்ளதாக ஹோண்டா கார் நிறுவனத்தின் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. எனவே, அடுத்த சில மாதங்களுக்கும் ஹோண்டா மொபிலியோ காரின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

டீலர் கட்டமைப்பு பலம்

டீலர் கட்டமைப்பு பலம்

நாடு முழுவதும் மாருதி நிறுவனத்துக்கு 1,358 டீலர்ஷிப்புகளும், சர்வீஸ் மையங்களும் இருக்கின்றன. ஆனால், ஹோண்டாவுக்கு 187 டீலர்ஷிப்புகள் மட்டுமே உள்ளன. இருப்பினும், ஹோண்டா பிராண்டு மீதுள்ள நம்பிக்கையும், புதிய டீசல் எஞ்சினும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

Most Read Articles
English summary
Honda Mobilio has dethroned Ertiga, one of Maruti Suzuki's best-sellers, to emerge as the leader in the compact multi-utility vehicle segment.
Story first published: Thursday, September 18, 2014, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X