ஹோண்டா மொபிலியோ Vs மாருதி எர்டிகா: விலை ஒப்பீடு விபரம்

வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் புதிய ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார் விற்பனைக்கு வந்துள்ளது. ஹோண்டாவின் நம்பகமான பிராண்டு மதிப்புடன் வந்திருக்கும் புதிய மொபிலியோ எம்பிவி கார் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டியாக குறிப்பிடப்படுகிறது.

இருப்பினும், இரு கார்களுக்கு இடையிலான விலை வித்தியாசம் ஒரு லட்சம் வரை இருக்கிறது. மேலும், எர்டிகாவுக்கு தள்ளுபடிகளை அறிவித்து மேலும் மதிப்புடைய காராக மாற்ற முயன்றுள்ளது மாருதி. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் இரு கார்களின் விலையையும் சீர்தூக்கி பார்த்துக் கொள்ளும் விதத்தில் இங்கே இரு கார்களின் விலை விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.


விலை ஒப்பீட்டுத் தகவல்கள்

விலை ஒப்பீட்டுத் தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் விலை விபரத்தை பார்த்துக் கொள்ளலாம்.

ஹோண்டா மொபிலியோ பெட்ரோல்

ஹோண்டா மொபிலியோ பெட்ரோல்

இ- வேரியண்ட்: ரூ.6.49 லட்சம்

எஸ்- வேரியண்ட்: ரூ.7.51 லட்சம்

வி- வேரியண்ட்: ரூ.8.78 லட்சம்

மாருதி எர்டிகா பெட்ரோல்

மாருதி எர்டிகா பெட்ரோல்

எல்எக்ஸ்ஐ: ரூ.5.80 லட்சம்

விஎக்ஸ்ஐ: ரூ.6.57 லட்சம்

விஎக்ஸ்ஐ(ஏபிஎஸ்): ரூ.6.65 லட்சம்

இசட்எக்ஸ்ஐ: ரூ.7.35 லட்சம்

ஹோண்டா மொபிலியோ டீசல்

ஹோண்டா மொபிலியோ டீசல்

இ- வேரியண்ட்: ரூ.7.89 லட்சம்

எஸ்- வேரியண்ட்: ரூ.8.60 லட்சம்

வி- வேரியண்ட்: ரூ.9.60 லட்சம்

ஆர்எஸ்: ரூ.10.86 லட்சம்

மாருதி எர்டிகா டீசல்

மாருதி எர்டிகா டீசல்

எல்டிஐ: ரூ.7.22 லட்சம்

விடிஐ: ரூ.7.85 லட்சம்

இசட்டிஐ: ரூ.8.49 லட்சம்

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

மொபிலியோவின் பேஸ் வேரியண்ட்டுக்கும், மாருதி எர்டிகாவின் பேஸ் வேரியண்ட்டுக்கு இடையில் ஒரு லட்ச ரூபாய் வரையிலும், டாப் வேரியண்ட்டுகளுக்கு இடையில் ரூ.1.6 லட்சம் வரையிலும் வித்தியாசம் இருக்கிறது. மேலும், எர்டிகாவின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் நேரடி பணத் தள்ளுபடியாக ரூ.30,000 வரை வழங்கப்படுகிறது. அப்படி பார்க்கும் போது விலை வித்தியாசம் மேலும் அதிகரிக்கிறது. ஹோண்டாவின் பிராண்டு மதிப்பும், மொபிலியோவின் இடவசதி, டீசல் மாடல் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை கவரும் என நம்பலாம்.

Most Read Articles
English summary
Japanese car maker Honda has launched Mobilio MPV car in India at an aggressive price range to take market leader Maruti Ertiga head on in the fastest growing car segment in the country.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X